விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் பணியாற்றும் முன்னணி நடிகராவார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து குறைந்த காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஆனவர். ஆரம்பத்தில் பின்னணியில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் விஜய் சேதுபதி. 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், நானும் ரவுடிதான், சேதுபதி, சூது கவ்வும், ஆரஞ்சு மிட்டாய் போன்ற பல திரைப்படங்களில் வயதானவர் நடுத்தர வயது தோற்றம் என பல தோற்றங்களை எடுத்து நடித்து பிரபலமான விஜய் சேதுபதி. மாஸ்டர், விக்ரம் வேதா போன்ற திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து புகழ் பெற்றவர் விஜய் சேதுபதி.
இதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான விடுதலை 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்றது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்களை பெற்றார். இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதனைத் தொடர்ந்து திரைப்படத்தில் தற்போது விஜய் சேதுபதி பிஸியாக நடித்து வருகின்றார். இப்படியான நிலையில் விஜய் சேதுபதி குறித்து டிராகன் பட ப்ரமோஷன் விழாவில் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து பேசியுள்ளார். அதில், ஓ மை கடவுளே திரைப்படத்தில் ஒருவேளை விஜய் சேதுபதி நடிக்கவில்லை என்றால் நான் வேறு யாரையாவது வைத்து படம் பண்ணி இருக்க ஆசைப்படலாம். சல்மான் கானை வைத்து கூட படம் பண்ண நான் விரும்பலாம்.
ஆனால் ரியாலிட்டி என்று ஒன்று உள்ளது. ஒரு மூன்று கோடி ரூபாய் பட்ஜெட் படத்தில் காசே வாங்காம ஒரு நாள் 15 மணி நேரம் அதாவது படம் ஃபுல்லா வர மாதிரி ஒரு காட்சியில் நடித்துக் கொடுக்க யாராலயும் முடியாது. ஆனா விஜய் சேதுபதி அந்த விஷயத்தை பண்ணாரு. என்ன பொறுத்த வரைக்கும் அவர்தான் கடவுள் மாதிரி. அதனாலதான் நான் இன்னைக்கு இந்த இடத்துல இருக்கேன். அந்தப் படத்தை சொன்ன மாதிரி மூணு கோடி பட்ஜெட்டில் எடுத்துக் கொடுத்தோம். 13 மொழிகளில் ரீமேக் ஆச்சு. படத்தால் நல்ல லாபம் தான் கிடைத்தது. மற்றவர்கள் சொல்வது போல் நஷ்டம் எதுவும் ஏற்படவில்லை என்று அஸ்வந்த் மாரிமுத்து பேசியுள்ளார்.