தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் கொண்டாடப்பட்டு வந்த நயன்தாரா சமீபத்தில் தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் அழைக்க வேண்டாம் என்றும் நயன்தாரா என்று அழைப்பதே தனக்கு மகிழ்ச்சி எனவும் தெரிவித்திருந்தார். தற்போது நயன்தாரா சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதனிடையே நயன்தாரா தனது திரையுலக பயணம் குறித்தும் திருமணம் குறித்தும் கடந்த வருடம் ஒரு ஆவண படத்தை தனது பிறந்த நாளில் நெட்பிலிக்சில் வெளியிட்டிருந்தார்.
அந்த ஆவண படத்தை நெட்பிலிக்ஸ் தளம் சுமார் 25 கோடிக்கு வாங்கியது. இது ஒரு பக்கம் இருக்க Netflix தற்போது நயன்தாராவை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்துள்ளதாக இயக்குனர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். நானும் ரவுடிதான் திரைப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் அந்த திரைப்படத்தின் மூன்று வினாடி காட்சிகளை நயன்தாராவின் ஆவணப்படத்தில் பயன்படுத்தியதால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு நயன்தாரா கடுமையாக விமர்சனம் செய்தும் கடிதம் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கில் நயன்தாரா மற்றும் netflix நிறுவனம் இணைந்து தனுசுக்கு எதிரான வழக்கை வாதிட்டு வருகிறது.
இன்று நயன்தாராவிற்கு ஆதரவாக நீதிமன்றம் வரை துணை நிற்கும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஒரு காலத்தில் நயன்தாரா தெரிந்த முகம் இல்லை என அவரை ரிஜெக்ட் செய்ததாக பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தயாரித்த சேக்ரட் கேம்ஸ் வெப் சீரிஸ் இல் ரா ஏஜென்ட் குசும் தேவி யாதவ் கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவை பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அப்போது நெட்பிளிக்ஸ் இந்தியாவில் நிறுவப்படவில்லை என்பதால் அவர்கள் தென்னிந்திய ரசிகர்களை பெரிதாக கருதவில்லை. அதன் காரணமாக அப்போது நயன்தாராவை அவர்கள் ரிஜெக்ட் செய்தனர். சர்வதேச ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக தேர்வு செய்து நடிக்க வைத்ததாக அனுராக் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வர தன்னை வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்த நிறுவனத்திற்கா தனது ஆவணப்படத்தை விற்றார் என இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.