25 வருஷ கனவு.! மிஷ்கின்கும் அர்ஜுன் சாருக்கும் நன்றி.! மனம் திறந்து பேசி வீடியோ வெளியிட்ட இயக்குனர் விஷால்..

By Ranjith Kumar on மார்ச் 16, 2024

Spread the love

முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் விஷால். தற்போது அவர் நீண்ட வருடம் கழித்து மாபெரும் வெற்றியை தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா உடன் இணைந்து திரைத் தெறிக்க ஓடிய படம் தான் “மார்க் ஆன்டனி”. நீண்ட வருடம் கழித்து இவருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்த ஒரே படம் இதுவே ஆகும். அதற்கு அடுத்ததாக இவருக்கு பல படங்கள் குவிந்த வண்ணமாக இருந்தது, ஆனால் எந்த படத்தையும் இவர் எடுத்துக் கொள்ளாமல், எந்த இயக்குனரிடம் கைகோர்க்காமல் இவர் அடுத்ததாக எடுத்த முயற்சி தான் திரையுலகையே உலுக்கியது.

2017 ஆம் ஆண்டு மிஸ்கின் அவர்கள் இயக்கத்தில் விஷால் மற்றும் பிரசன்னா அவர்கள் நடிப்பில் வெளியாகிய தமிழ் திரையுலகையே வியந்து பார்க்க வைத்த படம் தான் “துப்பறிவாளன்”. இந்த கதைக்களனும், நடிகர்களின் உடல் பாவனையும் மிக வித்தியாசமான முறையில் மிஸ்கின் அவர்கள் வெளிக்கொண்டு வந்துள்ளார். இப்படிப்பட்ட கதைகளை யாராலும் இயக்கவே முடியாத அளவிற்கு மிஸ்கின் எடுத்து மக்களை ஆச்சரியத்தில் உள்ளாக்கும் அளவிற்க்கு திரையில் வெளிக்கொண்டு வந்திருந்தார்.

   

தற்போது நீண்ட வருடம் கழித்து இப்படத்தை விஷால் அவர்கள் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதை அறிந்த திரையுலகமே அதிர்ச்சி அடைந்தது. மிஷ்கின் அவர்களுக்கும் விஷாலுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதால், இருவரும் இணையாமலே இருந்தார்கள். ஆனால் துப்பறிவாளன் பார்ட் 2 காண கதையை மிஸ்கின் இடம் முழுமையாக அதிகாரப்பூர்வமாக பெற்று, தற்போது இப்படத்தை விஷால் இயக்கி வருகிறார் என்று தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் விஷால் இயக்குனராக உருவெடுத்ததை மனம் திறந்து பேசி தன் இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்;

   

அதாவது, 25 வருட காலமாக நான் நினைத்த ஒரு விஷயத்தை சாதித்து உள்ளேன். இயக்குனராக முதல் முதலாக ஆகப் போகிறேன் என்று என் அப்பாவிடம் கேட்ட பொழுது, விக்ரம் சாரிடம் என்னை துணை இயக்குனராக சேர்த்து விட்டார். அவரிடம் கற்றுக்கொண்டு படிப்படியாக 25 வருடம் கழித்து தற்போது இயக்குனராக ஆகி உள்ளேன். எனக்கு ரொம்ப சந்தோஷம். இதற்கு காரணமாக இருந்த அர்ஜுன் சார் மற்றும் என் அப்பாவிற்கு மிக்க நன்றி. என் அன்பார்ந்த ரசிகர்களே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதை சாதிக்க நினைக்கிறீர்களோ அதை தீவிரமாக நினைத்தால் கண்டிப்பாக முடியும்.

 

அதுபோல்தான் நானும் இப்போது தீவிரமாக நினைத்தபடி இயக்குனராக ஆகி உள்ளேன். இதற்கு முழுக்க முழுக்க காரணம் அர்ஜுன் சார் தான், அதுமட்டுமில்லாமல் எனக்கு உறுதுணையாக இருந்தால் மிஷ்கின்க்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கும் மிக்க நன்றி என்று, இயக்குனராக உருவெடுத்த விஷால் அவர்கள் மனம் திறந்து தற்போது தன் இணையத்தில் வீடியோ ஒன்று பேசி வெளியிட்டுள்ளார்.