எடுத்த முதல் படமே பிளாப்.. பிறகு அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றிய நாடோடிகள் திரைப்படம் மூலம் வெற்றியை பதிவு செய்த சமுத்திரக்கனி..!

By Nanthini on பிப்ரவரி 5, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் சமுத்திரக்கனி. 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்த சமுத்திரக்கனி திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று பல்வேறு சவால்களை மேற்கொண்டு வெற்றியை ருசித்தவர். திரைத் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று பல்வேறு சவால்களை மேற்கொண்டு வெற்றிகனியை ருசித்தவர். இயக்குனர் கே பாலச்சந்தரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய சமுத்திரக்கனி 2003 ஆம் ஆண்டு வெளியான உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரது இயக்கத்தில் வெளியான முதல் படத்திற்கு சிறந்த கதைக்கான தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்ட் வழங்கப்பட்டது.

I have met my guru again - Samuthirakani | என் குருநாதரை மீண்டும் சந்தித்து விட்டேன் - சமுத்திரகனி

   

இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படமும் நல்ல வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து அரசி மற்றும் இதோ பூபாலன் போன்ற சீரியல்களை இயக்கியது மட்டுமல்லாமல் ஜன்னல் மற்றும் மர்ம தேசம் போன்ற சீரியல்களிலும் சமுத்திரக்கனி நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான அப்பா மற்றும் சாட்டை போன்ற திரைப்படங்கள் நடிகர் என்பதை தாண்டி இவரை வேறு தளத்திற்கு கொண்டு சென்றன. குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்த விசாரணை திரைப்படத்திற்காக சமுத்திரக்கனிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

   

சமுத்திரகனி எடுத்த படங்களா இது.?! மனுஷன் அதுனால தான் மறுபடியும் உதவி  இயக்குனரா போய்ட்டாரா.?!

 

இப்படி பல்வேறு பாராட்டுக்களும் விருதுகளும் கிடைத்திருந்தாலும் எப்போதும் மிகவும் எளிமையாகவே அனைவரிடத்திலும் பழகும் குணம் கொண்டவர். இவர் 2003 ஆம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் திரைப்படத்திற்கு கதை ஆசிரியராக பணியாற்றி திரைத்துறையில் அறிமுகமானார். தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லனாக நடித்து வருகின்றார்.  இப்படி சினிமாவில் பல திறமையோடு வலம் வந்து கொண்டிருக்கும் சமுத்திரக்கனி முதன்முதலில் நாடோடிகள் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருப்போம்.

இதுவரை 9 படங்கள் இயக்கி சமுத்திரக்கனி சம்பாதித்த லாபம்.. ஐந்து மடங்கு  கொட்டிக் கொடுத்த நாடோடிகள் - Cinemapettai

ஆனால் அவர் முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு வெளியான உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படத்தில் தான் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் சிறந்த கதை வசனத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது அவருக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு விஜயகாந்தை வைத்து நெறஞ்ச மனசு என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு பெறாத நிலையில் பிறகு இவர் துணை இயக்குனராக கே பாலச்சந்தரிடம் பணியாற்றினார். அதன் பிறகு பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகுதான் 2009 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் நாடோடிகள் திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தார் சமுத்திரக்கனி.