Categories: சினிமா

“பொய் கணக்கு சொன்னதா சொன்னீங்களே ?.. இப்ப என்ன சொல்ல போறீங்க?”… சூர்யா , கார்த்தியை மிஞ்சி வெள்ள நிவாரண நிதி அளித்த அமீர்…

Spread the love

அமீர் இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான படம் பருத்திவீரன். கார்த்தியின் முதல் படமான அந்தப் படம்தான் இன்றுவரை அவரது அடையாளமாகவே இருக்கிறது. ஆனால் அந்தப் படத்திலிருந்து அமீருக்கும், ஞானவேல் ராஜாவுக்கும் முட்டிக்கொண்டது. அமீர் பொய் கணக்கு காண்பித்தார் என ஞானவேல் ராஜா சொல்ல,  ஞானவேல் படத்தின் ஷூட்டிங் பாதியிலேயே காணாமல் போய்விட்டார். மீதி பணத்தை நானே தயார் செய்து படத்தை உருவாக்கினேன் என அமீர் கூற இந்த பிரச்னை பூதாகரமாக வெடித்தது.

#image_title

#image_title

இந்த விவகாரம் 17 வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக தன்னை மிரட்டி பருத்திவீரன் படத்தை எழுதி வாங்கிவிட்டார்கள் என்பதும் அமீரின் வாதமாக இருக்கிறது. தனக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத்தரும்படி அமீர் நீதிமன்றத்துக்கும் சென்றுவிட்டார். அந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதைத்தொடர்ந்து ஞானவேல் ராஜா தனது பேட்டியில் அமீரை சகட்டுமேனிக்கு மட்டம் தட்டி பேசினார். இது படைப்பாளிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இயக்குனர் சசிகுமார்,, சமுத்திரக்கனி, பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, பாரதிராஜா என பிரபலங்கள் பலரும் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து ஞானவேல் ராஜாவும் மன்னிப்பு கேட்டார். ஆனால் தற்பொழுது வரை இந்த பிரச்னை முடிவடையவில்லை. இந்த விஷயத்தில் இன்னும் சூர்யா, கார்த்தி , சிவகுமார் என மொத்த குடும்பமும் அமைதி காத்து வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையே தற்பொழுது வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை நாம் அறிவோம். பல்வேறு பிரபலங்களும் தங்களால் முடிந்த நிதி உதவியை அரசுக்கு கொடுத்து வருகின்றனர். நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் இணைந்து ரூ. 10 லட்சம் நிதி உதவி அளித்திருந்தனர். தற்பொழுது இயக்குனர் அமீர் தனி ஒருவராக அந்த 10 லட்சம் ரூபாயை நிதி உதவிக்கு கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘பொய் கணக்கு சொன்னதா சொன்னீங்களே ? இப்ப என்ன சொல்ல போறீங்க?’ அமீருக்கு ஆதரவாக குரலெழுப்பி, அவரின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.

Begam

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

5 minutes ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

7 minutes ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

11 minutes ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

12 minutes ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

17 minutes ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

18 minutes ago