சுப்ரமண்யபுரம் என்ற கல்ட் கிளாசிக் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் சசிகுமார். அந்த படத்தின் வெற்றியில் நடிகர் சசிகுமார் வெற்றி பெற, இயக்குனர் சசிகுமாருக்கு நீண்ட ஓய்வை கொடுத்துவிட்டார்.
தமிழ் சினிமாவில் பீரியட் படங்களின் உச்சம் என்று வெகுசில படங்களை சொல்லலாம். அந்த வரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் வரும் சுப்ரமண்யபுரம். பீரியட் படம் என்றதும் செட் அமைத்து படம்பிடிக்காமல் நிஜ லொகேஷன்களைத் தேவைக்கேற்ப மாற்றி எடுக்கப்பட்ட படம்தான் சுப்ரமண்யபுரம்
சுப்ரமண்யபுரம் 80 களின் மதுரையை தமிழ் சினிமாவில் அச்சு அசலாகக் கொண்டு வந்த படம். வீடுகள் முதல் சுவரொட்டி வரை எந்த இடத்திலும் குறை காண முடியாத படம் சுப்ரமணியபுரம். இந்த படத்தின் தாக்கத்தால் இப்போது வரை இயக்குனர் பீரியட் என்றால் 80 கள் எனக் காட்டி நடிகர்களுக்கு விக் வைத்து கழுதை காலர் சட்டையைப் போட்டு விடுகின்றனர்.
அதன் பின்னர் அவர் ஈசன் என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கினார். நாடோடிகள், சுந்தரபாண்டியன் என அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாக தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு மினிமம் கியாரண்டி நடிகராக உருவானார். அதன் பின்னர் தொடர்ந்து நடிப்பிலேயே கவனம் செலுத்தி வந்தார்.
சசிகுமாரின் சுப்ரமணியபுரம் பற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் அமீர் “என்னிடம் குற்றவாளிகள் என்றொரு திரைக்கதை இருந்தது. அதுவும் சுப்ரமண்யபுரம் படத்தின் கதையைப் போன்றதுதான். அதை நான் எடுப்பதற்குள் சசி, சுப்ரமணியபுரம் படத்தை எடுத்து விட்டான். அதனால் என்னால் அந்த படத்தை எடுக்க முடியவில்லை” எனப் பேசியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…