எனக்கு நண்பர்கள் கிடையாது… என் மகளுக்காக அதை விரும்பல… நெகிழ வைக்கும் தந்தையாக இயக்குனர் அகத்தியன்..!

By Soundarya on மார்கழி 8, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு இயக்குனர் திரைக்கதை மற்றும் இயக்கத்துக்காக தேசிய விருது வாங்கியது காதல் கோட்டை படத்துக்காக இயக்குனர் அகத்தியன்தான். தமிழ் சினிமாவில் 90 கள் முழுக்க காதல் கதைகளுக்கான காலமாக அமைந்தது. இவருக்கு  கனி, விஜயலட்சுமி மற்றும் நிரஞ்சனா ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இயக்குனர் அகத்தியனின் மூத்த மகளான கனி, இயக்குனர் திரு என்பவரையும், இரண்டாவது மகளான விஜயலஷ்மி இயக்குனர் ஃபெரோஸ் என்பவரையும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

   

அவருடைய மூன்றாவது மகளான நிரஞ்சனிக்கும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் நடைற்றது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இயக்குனர் அகத்தியனின் 3 மருமகன்களுமே இயக்குனர்கள் என்பது ஒரு ஆச்சரியமான ஒற்றுமையாக கோலிவுட்டில் பார்க்கப்பட்டு வருகிறது.

   

 

‘சென்னை 600028′ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. இத்திரைப்படத்தை தொடர்ந்து அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், பிரியாணி போன்ற பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.’அதே நேரம் அதே இடம்’ திரைப்படத்தில் இவர் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் அகத்தியன், சினிமா நண்பர்கள் இல்லாததற்கு காரணம், நட்பு என்றால் நண்பர்களை வீட்டிற்கு கூட்டிட்டு வர வேண்டியிருக்கும்.

#

எனக்கு மூன்று பெண் குழந்தைகள். அதனால் அவர்களுக்கு சுதந்திரம் வேண்டும். ஆண் நண்பர்களை கூட்டிட்டு வந்தால் அவர்களுக்கு சிரமமாக இருக்கும். நான் பெரிய வீட்டில் வசிக்கல. சின்ன வீடு அப்பார்மெண்டில் தான் வசித்தோம். அம்மா இல்லாத பிள்ளைங்க. அதனால் தான் நட்பு வட்டாரத்தை குறைச்சிக்கிட்டேன் என்று பேசியுள்ளார்.