கலையரசன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர் ஆவார். இவரது முழு பெயர் கலையரசன் ஹரிகிருஷ்ணன் என்பதாகும். இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாள திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். எஸ்ஆர்எம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் துறையில் பட்டம் பெற்ற கலையரசன் 2010 ஆம் ஆண்டு அர்ஜுனன் காதலி படத்தில் தோன்றியதன் மூலம் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார். பின்னர் 2010 ஆம் ஆண்டு நந்தலாலா, 2012 இல் முகமூடி, அட்டகத்தி 2013இல் மதயானை கூட்டம் போன்ற திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார் கலையரசன்.
அடுத்ததாக 2014 ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் திருப்புமுனையை பெற்றார் கலையரசன். மெட்ராஸ் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை தொடர்ந்து சினிமாவில் பல வாய்ப்புகளை பெற்றார் கலையரசன். தொடர்ந்து அன்பே, உறுமீன், கபாலி, முப்பெரிமாணம், தானா சேர்ந்த கூட்டம், ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, கழகத் தலைவன், 10 தல, hotspot போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் கலையரசன்.
இறுதியாக மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக அனைவரின் பாராட்டுகளை பெற்றார். இந்த நிலையில் கலையரசன் இயக்குனர் பா. ரஞ்சித்துடன் இணைந்து மார்கழியில் மக்கள் இசை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோவை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அசாம் மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், தங்களது முதல் மனைவியை சட்டரீதியாக விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் அவர்கள்…
ஜாகீராபாத் நகரில் உள்ள ஜெய் பவானி நகைக்கடையில், சனிக்கிழமை நான்கு பெண்கள் புர்கா அணிந்து வாடிக்கையாளர்களைப் போல் நுழைந்துள்ளனர். அவர்களுடன்…
ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில், ஜேசிபி ஓட்டுநருக்கும் அதன் உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஓட்டுநர் உரிமையாளரின்…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பஹராம்பூர் பகுதியில், மதுபானக் கடைக்கு வெளியே இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, கழிவுநீர்…
அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரைச் சேர்ந்த தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் டேவ் மக்மாஃஹான், செய்தி அறையில் தனது மேலதிகாரியுடன் ஏற்பட்ட காரசாரமான…
உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராமநகரின் கர்ஜியா பகுதியில், ஆகஸ்ட் 17 திங்கள்கிழமை பட்டப்பகலில் புலி ஒன்று குடியிருப்பு…