என்னது நம்ம கேப்டனை வைத்து சமுத்திரக்கனி படம் எடுத்திருக்காரா..? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!!

By Priya Ram

Published on:

இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி பாலச்சந்திரன் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். இவர் அரசி, செல்வி போன்ற தொடர்களையும் இயக்கினார். முதன் முதலில் கடந்த 2003-ஆம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக தனது பயணத்தை தொடங்கினார்.

   

சசிகுமார், விஜய், பரணி ஆகிய மூன்று பேரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. அடுத்ததாக சசிகுமார் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கிய போராளி திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படம், 2016-ஆம் ஆண்டு வெளியான அப்பா திரைப்படம், 2016-ஆம் ஆண்டு வெளியான விசாரணை திரைப்படம் ஆகியவையும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வெற்றி படங்களை கொடுத்த சமுத்திரக்கனி கேப்டன் விஜயகாந்த் வைத்து ஒரு படம் இயக்கியுள்ளாராம்.

தேமுதிக தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பலரும் அஞ்சலி செலுத்தினர். சமுத்திரக்கனி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த படம் நிறைஞ்ச மனசு. இதில் சூசன், சம்பத்ராஜ், மனோரமா, வினு சக்கரவர்த்தி, மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் 2004-ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவு படம் நல்ல வரவேற்பை பெறவில்லை.

Vijayakanth

author avatar
Priya Ram