டாடா குழுமத்தைச் சேர்ந்த முன்னனி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS), தற்போது ‘சர்வீஸ் நவ் டெவலப்பர்’ (Service Now Developer) பணிக்கான காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ITSM மற்றும் ITOM மாடல்களில் நிபுணத்துவம் பெற்றிருப்பதுடன், CMDB கான்பிகரேஷன் மற்றும் பராமரிப்பில் போதிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் ஜாவா ஸ்கிரிப்ட், கிளிட் ஏபிஐ (Glide APIs), எச்டிஎம்எல், சிஎஸ்எஸ் மற்றும் ஃப்ளோ டிசைனர் போன்ற தொழில்நுட்பங்களில் ஆழ்ந்த அறிவு பெற்றிருப்பது அவசியமாகும்.
அனுபவத்தைப் பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 8 ஆண்டுகள் வரை பணி அனுபவம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், தேர்ந்தெடுக்கப்படும் நபரின் திறமை மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப சிறந்த ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிகிறது. நேர்காணலின் இறுதிச் சுற்றின் போது சம்பளம் குறித்த முழு விவரங்களும் விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்படும்.
இந்த வேலைக்கான நேர்காணல் ஏப்ரல் 25-ம் தேதி நேரடியாக (Face to Face) நடைபெற உள்ளது. தகுதியுள்ளவர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்; அதன் பிறகு தகுதியானவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு நேர்காணல் நடக்கும் இடம் மற்றும் நேரம் குறித்த தகவல்கள் மின்னஞ்சல் மூலம் பகிரப்படும். இந்த நேர்காணலில் தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
