பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சித்தா பற்றி பிரதீப்பிடம் பேசிய தினேஷ்… என்ன சொன்னாருன்னு தெரியுமா…?

By Begam on கார்த்திகை 4, 2023

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். 6 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் 7 வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது.  அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் 35 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில்  மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் அனன்யா, பாவா செல்லத்துரை, விஜய் வர்மா,  வினுஷா மற்றும் யுகேந்திரன்  என 5 போட்டியாளர்கள் தற்பொழுது வரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

   

ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கும் , சண்டைக்கும் பஞ்சமில்லாமல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் வீட்டை விட்டு 5 போட்டியாளர்கள் வெளியேற, பாடகர் கானா பாலா, சீரியல் நடிகை அர்ச்சனா, சீரியல் நடிகர் தினேஷ்( சீரியல் நடிகை ரக்ஷிதாவின் கணவர்), நகைச்சுவை பேச்சாளர் அண்ணா பாரதி, RJ பிராவோ என 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கி உள்ளனர். பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்தவர்களை எதிரிகளாகவே நடத்தி வருகின்றனர் பிக் பாஸ் ஹவுஸ்மாட்ஸ்.  நிகழ்ச்சியும் சூடு பிடிக்க பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

   

 

கடந்த 6 வது சீசனில் சீரியல் நடிகை ரச்சிதா கலந்துகொண்டிருந்தார். இந்த 7வது சீசனில் வைல்ட் கார்ட்டு என்டரியாக அவரது கணவர் தினேஷ் கலந்துகொண்டிருக்கிறார். தற்பொழுது இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வது நாம் அனைவரும் அறிந்ததே. ரச்சிதா கலந்துகொண்ட சீசனில் தனது கணவர் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை, ஆனால் தினேஷ் தற்பொழுது பேசியுள்ளார்.

அதாவது 24 மணி நேர எபிசோடில் தினேஷ்-பிரதீப் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது பிரதீப் நீங்க இதற்கு முன்பு உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி எல்லாம் பார்த்திருக்கீங்களா? என்று கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு தினேஷ் ‘இல்லை. நான் கடந்த சீசன் மட்டும் தான் பார்த்தேன். ஏனென்றால் அந்த சீசனில் என்னுடைய மிஸ்ஸஸ் இருந்தாங்க. அதனால அவங்களுக்காக பார்த்தேன்’ என்று தினேஷ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.