BREAKING: இரவோடு இரவாக விஜய் கட்சியில் இணைந்தார் பிரபல நடிகர்.. யாரும் எதிர்பாராத டடுவிஸ்ட்..!!

By Soundarya on சித்திரை 15, 2026

Spread the love

பிரபல சின்னத்திரை நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான தினேஷ், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அவர் தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டார். ஒரு தலைவனாக உருவெடுக்க விஜய் செய்த தியாகங்களும், அவரது கொள்கைகளும் தன்னை வெகுவாகக் கவர்ந்ததால் இந்த முடிவை எடுத்ததாக தினேஷ் தெரிவித்துள்ளார்.

விஜய் முன்னெடுக்கும் எழுச்சிமிகு அரசியலில் உள்ள தடைகளைத் தாண்டி, அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நம்பிக்கை தவெகவிடம் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். திரைத்துறையிலிருந்து ஏற்கனவே பல முக்கியப் புள்ளிகள் தவெகவில் இணைந்து வரும் நிலையில், தினேஷின் இந்த வருகை கட்சியினரிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.