திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், “சமீபத்தில் லண்டன் சென்ற முதல்வர் விஜய், நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் ரேஸ் போட்டியை கொடியசைத்துத் தொடங்கி வைத்துள்ளார். மக்கள் பணத்தைத் தொட மாட்டேன் என்று கூறிய விஜய், இன்று மக்கள் பணத்தில் லண்டன் சென்று கார் ரேஸைத் தொடங்கி வைப்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறார். சினிமாவில் விஜய்க்கு எதிராக மக்கள் செல்வாக்குடன் முதலிடத்தில் இருப்பது நடிகர் அஜித் குமார் மட்டுமே” என்று குறிப்பிட்டார்.
மேலும், “அஜித் குமார் மட்டும் அரசியலுக்கு வந்துவிட்டால் விஜய்யின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிடும். லண்டனில் அஜித்தைச் சந்தித்தது அன்பினால் அல்ல… ‘நீயும் என் நண்பன் தான், அதனால் தயவுசெய்து அரசியலுக்கு வந்துவிடாதே’ என்று சொல்வதற்காகத்தான் அவர் சென்றுள்ளார். சென்னையில் செய்ய வேண்டிய வேலையை மறந்துவிட்டு லண்டன் சென்றுள்ள விஜய்யின் இந்தச் சந்திப்பு வெறும் அரசியல் கணக்குதான்” என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசிய பேச்சுத் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
