மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு பொதுக்கூட்டங்கள் மற்றும் விவாத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாடநூல் கழகத் தலைவரும் திமுக பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி, தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தற்போதுள்ள முதலமைச்சருக்கு தனது அமைச்சரவையில் யார் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை; அவரைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கும் தங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் யார் என்று தெரியவில்லை. அமைச்சர்களுக்கே தாங்கள் எந்தத் துறைக்கு அமைச்சர்கள் என்பது இன்றுவரை தெரியவில்லை என்று லியோனி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மேலும், முதலமைச்சர் விஜய்யின் நிர்வாகத் திறனைக் கேலி செய்யும் வகையில் ஒரு அதிரடி சவாலையும் அவர் விடுத்தார். முதலமைச்சர் விஜய் தனது அமைச்சரவையில் உள்ளவர்களின் பட்டியலை மட்டும் தப்பில்லாமல் வரிசையாகக் கூறிவிட்டால், அவருக்கு திமுகவின் முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ. 10 லட்சம் பம்பர் பரிசு வழங்குவார் என்று மேடையிலேயே சவால் விட்டார். கடந்த ஆண்டு இதே ஜூன் 12-ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேட்டூர் அணையைத் திறந்து வைத்ததை சுட்டிக்காட்டிய லியோனி, “இன்றைய முதலமைச்சர் எங்கே இருக்கிறார் தெரியுமா? விவசாயிகள் அணை திறப்புக்காகத் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு காத்துக்கொண்டிருக்க, அவரோ கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் துண்டைப் போர்த்திக்கொண்டு சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆர் மூகாம்பிகை கோவிலுக்குப் போனார் என்பதற்காகத் தானும் போனால் எம்.ஜி.ஆர் ஆகிவிடலாம் என்று விஜய் தப்புக் கணக்கு போடுகிறார்” என்று சாடினார்.
முதலமைச்சரின் ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட ஈடுபாட்டையும் லியோனி கடுமையாகச் சாடினார். “ஜோதிடத்தை மட்டுமே நம்பி இந்த ஆட்சியில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். இதுவரை உங்கள் தலையில் கருப்புப் பொட்டையோ, கையில் சிவப்புக் கயிற்றையோ யாரும் பார்த்திருக்க முடியாது; ஆனால் இப்போது ஜோசியக்காரர் சொன்னார் என்பதற்காக இதையெல்லாம் செய்துகொண்டு ஒரு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். இதே ஜோதிடத்தால் நீங்கள் வீணாய்ப் போவீர்கள்” என்று எச்சரித்தார். சமூக வலைத்தளங்களில் தற்போது காட்டுத்தீயாய் பரவி வரும் திண்டுக்கல் ஐ.லியோனியின் இந்த காரசாரமான பேச்சு, திமுக மற்றும் தவெக தொண்டர்களிடையே பெரும் விவாதத்தையும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…