கேம்சேஞ்சர் தோற்றது ஏன்?.. தில் ராஜு புரிஞ்சுகிட்டார்… ஷங்கர் எப்போ புரிஞ்சுக்கப் போறார்?

By vinoth on பிப்ரவரி 4, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் வியாபார எல்லையைப் பெருக்கியவர்களில் ஒருவர் இயக்குனர் ஷங்கர். அவர் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 கமர்ஷியல் இயக்குனராக அறியப்பட்டார். ஆனால் சமீபகாலமாக அவர் இயக்கிய ஐ, 2.0 மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்கள் அவரது முந்தையப் படங்களின் வெற்றியைப் பெறவில்லை.

அதிலும் இந்தியன் 2 திரைப்படம் கடுமையான கேலிகளுக்கு ஆளாகியுள்ளது. சமூகவலைதளங்களில் அந்த படத்தை அக்குவேறு, ஆணிவேராகக் கிழித்து தொங்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்தனைக்கும் ஷங்கர் தன்னுடைய படங்களில் ஊழல் எனும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதே காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

   

இதையடுத்து அவர் தெலுங்கில் கேம்சேஞ்சர் படத்தை இயக்கி, அதை பேன் இந்தியா ஸ்டிக்கர் ஒட்டி விற்கப்பார்த்தார். ஆனால் அந்த படமும் பப்படம் ஆனது. இதனால் ஷங்கர் இப்போது  தன்னையே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார் என்று கருத்துகள் எழுந்துள்ளன.

   

ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத ஷங்கர் ரசிகர்கள் மாறிவிட்டார்கள். என்றெல்லாம் பேசி வருகிறார். ஒரு நேர்காணலில் “இப்போதுள்ள ரசிகர்களின் பார்க்கும் திறன் குறைந்துவிட்டது. அவர்கள் இப்போது அதிகளவில் ரீல்ஸ்களைப் பார்க்கிறார்கள். அதை மனதில் கொண்டுதான் நான் கதையை எழுதினேன். “ என்று பேசியிருந்தார்.

 

இந்நிலையில் கேம்சேஞ்சர் திரைப்படம் ஏன் தோல்வி அடைந்தது என்பது குறித்து அந்த படத்தின் தயாரிப்பாளர் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் “கதைதான் காரணம். கதை மற்றும் காட்சிகளில் கவனம் செலுத்தாமல், பட்ஜெட் மற்றும் பிரம்மாண்டத்தின் மேல் கவனம் செலுத்தியதால்தான் கேம்சேஞ்சர் படம் தோல்வியடைந்தது. நான் நிறைய நல்ல கதை மற்றும் திறமையான இயக்குனர்களை வைத்து ஹிட் கொடுத்துள்ளேன். உச்ச நட்சத்திரங்களை வைத்து படம் எடுப்பது முக்கியமில்லை” எனக் கூறியுள்ளார்.

தோல்விக்குக் காரணமென்ன என்பதை தில் ராஜு உணர்ந்த அளவுக்குக்கூட ஷங்கர் உணரவில்லை என்பதுதான் சோகம்.