Actor Vijay

இரவு ஏழு மணிக்கு மேல, விஜய் அதை செய்யவே மாட்டார், ரொம்ப நாள் பழக்கமாம் – அதுதான் அவரோட பிட்னஸ் ரகசியமுன்னு சொல்றாங்க

By admin on கார்த்திகை 1, 2023

Spread the love

நடிகர் விஜய், வயது 50களை நெருங்கும் நிலையில், இன்றும் இளைஞன் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கிறார். நடிக்க வந்த புதிதில் எப்படி இருந்தாரே, இப்பவும் அப்படித்தான் அவரது தோற்றத்தில் இருக்கிறார். ஸ்லிம் ஆக, பிட்னஸ் ஆக அவர் இருப்பதால்தான், எப்போதும் அவரிடம் ஒரு சுறுசுறுப்பை, வேகத்தை படங்களில் காண முடிகிறது. எந்தவிதமான உடை அணிந்தாலும், அவருக்கு எளிதாக பொருந்தி, அழகாக எடுப்பாக இருக்க காரணம், தோற்றத்தை பொலிவாக விஜய் வைத்திருக்கிறார். அவர் உடல் ஆரோக்கியத்தில், எடையை பராமரிப்பதில் விஜய் அதிக கவனம் செலுத்தி வருகிறார். Actor Vijayபொதுவாக, சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பதை சினிமா கலைஞர்கள் முக்கியமாக கருதுகின்றனர். ஆரோக்கியம் இல்லை என்றால், நூற்றுக்கணக்கில் கோடி, கோடி ரூபாயாக முதலீடு செய்யும் சினிமாவில், அவர்கள் நிலைத்திருக்க உடல் ஆரோக்கியமும், பொலிவான தோற்றமும் மிக முக்கியம். விஜய் இப்போதும் மணிக்கணக்கில் உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார். உடல் எடை அதிகரிக்காமல் கவனித்துக்கொள்கிறார். குறிப்பாக, உணவு கட்டுப்பாட்டில் மிக கவனமாக இருக்கிறார். Actor Vijayவிஜய், இப்படி எப்போதுமே பிட்னஸ் ஆக இருக்க முக்கிய காரணங்களில் ஒன்று, தினமும் இரவு 7 மணிக்குள் டின்னரை முடித்து விடுகிறார். அதாவது, இரவு உணவை, நைட் 7 மணிக்கு பிறகு அவர் சாப்பிடுவதே இல்லை.நீண்ட காலமாகவே, இதை விஜய் பின்பற்றி வருகிறார். இரவு 7 மணிக்கு டின்னர் சாப்பிட்டு விட்டால், தூங்கும் வரை இடையில் டீ, காபி ஏதேனும் சாப்பிடுவதோடு சரி. இப்படி 7 மணிக்குள் டின்னரை முடித்துக்கொள்வதும் அவரது பிட்னஸ்க்கான காரணங்களில் முக்கியமான ஒன்று என்ற தகவல் வைரலாகி வருகிறது.