Connect with us

தமிழ் சினிமாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் இவர் தான்.. அடடே, இந்த பிரபலத்தின் மகள் தானா இவர்..

CINEMA

தமிழ் சினிமாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் இவர் தான்.. அடடே, இந்த பிரபலத்தின் மகள் தானா இவர்..

இன்று பெண்கள் அணைத்து துறைகளிலும் சாதனை புரிய தொடங்கி விட்டார்கள். டாஜ்ட்டார், இன்ஜினியர் என தொடங்கி விண்வெளி வரை பெண்கள் சென்று விட்டார்கள். பெண்கள் கால் பாதிக்காத துறையே இல்லை. குறிப்பாக சினிமா துறை. நமக்கு சினிமாவில் நடிக்கும் நடிகைகள் தான் தெரியும், ஆனால் இப்போது பெண் இயக்குனர்கள் பலரும் வந்துவிட்டனர்.

Women directors in tamil cinema

பெண்கள் இயக்குனராக, நடிகையாக, இசையமைப்பாளராக, பாடகியாக, தயாரிப்பாளராக நாம் பார்த்திருப்போம் ஆனால் ஒளிப்பதிவாளர் பெண்களே இப்போது சினிமாவில் இல்லை என்பது தான் கவலையே. ஆனால் ஒரு பெண் சினிமா ஆரம்பித்த காலத்திலேயே ஒளிப்பதிவாளராக இருந்துள்ளார். அவர் யார் தெரியுமா ?

   

BRBandulu

 

“வீரபாண்டிய கட்டபொம்மன்”, “கப்பலோட்டிய தமிழன்”, “ஆயிரத்தில் ஒருவன்” போன்ற பல கிளாசிக் திரைப்படங்களை இயக்கியவர் பி.ஆர்.பந்தலு. இவர் மிகப் பிரபலமான இயக்குனராக அறியப்பட்டிருந்தாலும் இவரது மகளான பி.ஆர்.விஜயலட்சுமியை சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருக்கமாட்டார்கள்.

பி.ஆர்.பந்துலுவின் மூத்த மகளான பி.ஆர்.விஜயலட்சுமி இந்தியாவில் மட்டுமின்றி ஆசியாவிலேயே முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்ற பெருமையை பெற்றவர். இவர் பிரபல ஒளிப்பதிவாளரான அசோக்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

BR Vijayalakshmi

1985 ஆம் ஆண்டு வெளிவந்த பாக்யராஜ்ஜின் “சின்ன வீடு” திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து “அறுவடை நாள்”, “சிறைப் பறவை”, “தெக்கத்தி கள்ளன்”, “மல்லுவேட்டி மைனர்” போன்ற பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

மேலும் 1995 ஆம் ஆண்டு வெளியான “பாட்டு பாடவா” என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். அதே போல் “பாஸ்கட்” என்ற திரைப்படத்தையும் மலையாளத்தில் “அபியுடே கதை அணுவின்டேயும்” ஆகிய திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

Cinematographer BR Vijayalakshmi

இவரை குறித்த மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய முதல் இயக்குனர் இவர்தான். மிகவும் புகழ்பெற்ற தமிழ் தொலைக்காட்சித் தொடர்களான “மாயா மச்சீந்திரா”, “வேலன்”, “ராஜ ராஜேஸ்வரி” போன்ற பிரபல சீரீயல்களை இயக்கியவர் விஜயலட்சுமிதான். இவ்வளவு பெருமைக்கும் சொந்தக்காரராக திகழ்ந்து வரும் பி.ஆர்.விஜயலட்சுமி தற்போது “சரீகமா” என்ற பிரபல ஆடியோ கம்பெனியின் கிரியேட்டிவ் ஹெட் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Deepika
Continue Reading
To Top