துருவ நட்சத்திரம் படத்தை மறுத்த சூர்யா… என்ன காரணம் ? உண்மையை உடைத்த கவுதம் மேனன்

By Deepika

Published on:

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் துருவ நட்சத்திரம், இந்த திரைப்படத்தில் சூர்யா தான் கதாநாயகனாக நடிக்க இருந்தார் ஆனால் சூர்யா மறுத்ததால் இதில் விக்ரம் நடித்தார் என கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

Director Gautham menon

மின்னலே படத்தில் தொடங்கி காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கி பாயும் தோட்டா, வெந்து தணிந்தது காடு என பல ஹிட் படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்.

   
Still from Dhuruva natchathiram

குறிப்பாக பெண்களுக்கு மிக பிடித்த இயக்குனர், இவரைப்போல பெண்களை திரையில் அவ்வளவு கண்ணியமாக காட்ட இயலாது. அதனாலேயே பெண்களுக்கு கவுதம் மேனன் படம் என்றால் இஷ்டம். அதேபோல் ஒரு தலைமுறைக்கே காதலை சொல்லி கொடுத்தவர் கவுதம் தான். அப்படிப்பட்ட இயக்குனர் சமீபமாக படங்களில் நடித்தும் வருகிறார். இவர் இயக்கத்தில் ஹாலிவுட் தரத்தில் உருவாகி உள்ள துருவ நட்சத்திரம் பல ஆண்டுகளாக வெளியாக முடியாமல் தவித்து வருகிறது.

Suriya rejects dhuruva natchathiram

இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் கவுதம், துருவ நட்சத்திரம் படத்திற்கு முதன் முதலில் என் சாய்ஸ் சூர்யா தான். சூர்யாவும் நானும் நல்ல நண்பர்கள், அதனால் நான் அவரிடம் இந்த கதையை கூறினேன். கதையை கேட்ட அவர் இதுபோல் எந்த படமும் வந்ததில்லை, இது எப்படி வரும் என எனக்கு ஒரு பயம் உள்ளது என்றார். இதுபோல் இந்திய சினிமாவில் படம் வந்ததில்லை, இது நிச்சயமாக நன்றாக வரும் என்றேன் ஆனால் சூர்யாவை கன்வின்ஸ் செய்ய முடியவில்லை.

Gautham menon and vikram

அதனால் இது வேண்டாம் என சூர்யா கூறிவிட்டார், அதன்பிறகு இந்த கதை சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு சொன்னேன், அவர் அந்த சமயத்தில் கபாலியை டிக் செய்த காரணத்தால், இறுதியாக விக்ரமை புக் செய்து படத்தை தயார் செய்தோம் என கூறியுள்ளார். காக்க காக்க, வாரணம் ஆயிரம் என சூர்யாவுக்கு மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த கவுதமை ஏன் சூர்யா முழுமையாக நம்பி இதில் நடிக்கவில்லை என நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

author avatar
Deepika