இது நம்ம லிஸ்டலையே இல்லையே.. இதுதான் தலைவர் 171 படத்தின் கதையா..? காத்துவாக்குல கெடச்ச தகவல்..

By Deepika

Updated on:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார், அடுத்தாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இந்தப்படத்திற்கு தலைவர் 171 என தற்போதைக்கு டைட்டில் வைத்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

   

லோகேஷின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பு அறிவு இந்த படத்திற்கு சண்டை காட்சிகள் அமைக்க உள்ளனர். இந்த நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்ல படத்தின் டைட்டில் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thalaivar 171 look

இந்தநிலையில் தலைவர் 171 படத்தின் கதை இதுதான் என ஒரு கதை லீக்காகி உள்ளது. அதாவது, படத்தில் ரஜினி மிகப்பெரிய தாதாவாக நடிக்கிறாராம், டைம் டிராவல் செய்து எதிரிகளை அழிக்கும் கதை என சொல்லப்படுகிறது. அதேசமயம் இதுவும் எல்.சி.யு வில் வரும் என்பது உறுதியாம். போதை பொருட்களை கடந்த காலத்துக்கு டைம் டிராவல் செய்து அழிக்கும் கேங்ஸ்டர் தான் ரஜினி.

Rajini vs Rolex

இவர் ரோலக்சின் அப்பாவாக வருவார் என்றும் சொல்கிறார்கள். அப்படி என்றால் நிகழ்காலத்தில் அப்பாவுக்கும் மகனுக்கும் பெரிய சண்டை இருக்கும் என்றும் நிச்சயம் சூர்யா நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே லியோ எல்.சி.யு இல்லை என லோகேஷ் கூறினார், ஆனால் அது எல்.சி.யு வில் இருப்பது படம் வெளியான பின்னர் தெரிந்தது. அதேபோல் தான் இந்த படமும் இருக்கும் என சொல்லப்படுகிறது. எது எப்படியோ ஒரு புதுவிதமான ரஜினியை பார்க்கலாம்.

author avatar
Deepika