ரியல் ‘நஜீம்’ யார் தெரியுமா..? நிஜத்தில் நடந்த உண்மை கதை தான் ப்ரித்விராஜின் ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படம்..

By Deepika

Updated on:

மலையாளத்தில் ப்ரித்விராஜ் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆகியுள்ள படம் ஆடுஜீவிதம். ஆடுஜீவிதம் படம் பார்த்து வெளியே வருபவர்களின் கண்ணில் நிச்சயம் அந்த தாக்கம் தெரியும். பணம் சம்பாரிப்பதற்காக இங்கிருந்து சவூதி சென்ற இளைஞன் கொத்தடிமையாக அங்கு மாட்டிக்கொண்டு, அங்கிருந்து தப்பிக்கும் கதை தான் ஆடுஜீவிதம். இது நஜீம் என்ற கேரளாவை சேர்ந்த ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை கதை.

prithviraj new look for aadujeevitham

ஆம், இது உண்மை கதை, இதுகுறித்து நஜீம் ஒரு நாவலே எழுதியுள்ளார். 1993 ஆம் ஆண்டு அலப்புழாவை சேர்ந்த நஜீம் என்ற நபர் தன்னுடைய கடனை அடைத்து, பணம் சம்பாரிப்பதற்காக வெளிநாடு செல்ல நினைக்கிறார். தன்னுடைய எட்டு மாத கர்ப்பிணி மனைவியை விட்டு சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு செல்கிறார். ஆனால் இவரின் துரதிஷ்டவசம் இவர் ஒரு தவறான நபரின் கைகளில் சிக்கி விடுகிறார். வேலை தருவதாக சொல்லி நஜீமை ஒரு பாலைவன பகுதிக்கு அழைத்து செல்கிறார்.

   

ஆளே இல்லாமல் இருக்கும் அந்த பாலைவன பகுதியில், ஒரு கொட்டகை மட்டும் உள்ளது. நஜீமை அழைத்து சென்ற அந்த நபர் அவரை அந்த கொட்டகையில் இருந்தவரிடம் விட்டு செல்கிறார். அப்போது தான் நஜீமிற்கு தான் எங்கு வந்து சிக்கி இருக்கிறோம் என்பது தெரிகிறது. ஆடுகளை மேய்க்கும் வேலை, ஆனால் மூன்றரை வருடம் கான்டராக்ட், கொத்தடிமையாக ஆக்கப்பட்டிருக்கிறோம் என்பது அப்போது தான் தெரிகிறது. நஜீமிடம் ஆடுகளை கொடுத்து அவைகளை மேய்த்து வா சொல்கிறான் அந்த அரேபிய ஆள்.

Prithviraj in aadujeevitham

ஆனால் நஜீமிற்கு ஆடுகளை எப்படி மேய்ப்பது என தெரியாது, ஆடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் செல்ல ஆரம்பித்து விட்டன. இவைகளை சமாளிக்க முடியாமல் நஜீம் தவிக்கும்போது பெல்ட்டினால் அவரது முதுகில் ஆதி விழுகிறது. ஆடுகளுக்கு சொந்தக்காரனான அந்த அரேபிய ஆள் நஜீமை துன்புறுத்துகிறான். நஜீமிற்கு தண்ணீர் கூட கொடுக்க மாட்டானாம், ஒரு நாளைக்கு ஒரு வேளைக்கு மட்டும் தான் குஸ்கா என்ற ரொட்டி கொடுக்கப்படும், அதுவும் கடிக்க முடியாதப்படி இருக்கும். அதை உன்ன வேண்டும் என்றால் தண்ணீர் அல்லது ஆட்டுப்பால் கொண்டு தான் உன்ன வேண்டுமாம்.

நஜீமிற்கோ தண்ணீர் வழங்கப்படாது, ஆட்டுப்பால் வாந்தி வரும் அளவிற்கு நாற்றம் அடிக்குமாம். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், மலம் கழித்தால் கூட தண்ணீர் கிடைக்காது, கற்களை கொண்டு தான் சுத்தப்படுத்த வேண்டுமாம். உடுத்த வேறு உடையும் இல்லை, அருந்த தண்ணீர் இல்லை. அதேபோல் பாலைவனத்தின் மணலில் தான் படுத்து உறங்க வேண்டும். எப்படிப்பட்ட கொடுமையான நாட்களாக அவை இருந்திருக்கும். அங்கிருந்த தப்பிக்க வேண்டும் என நஜீம் பல முறை முயற்சித்துள்ளார். ஆனால் ஒவ்வொரு முறை தப்பிக்கும் போது, அந்த அரேபிய ஆள் இவரை காரில் வந்து அடித்து இழுத்து செல்வாராம்.

Najeeb aadujeevitham

அடிக்கடி ஆடுகளுக்கு தண்ணீர் கொண்டு வர ஒரு கார் வரும், அவர்களுடன் பேச முற்பட்டால் அதற்கும் ஆதி விழும், எப்படி தப்பிக்க இது நம் வாழ்க்கையா என நஜீம் பல முறை மனமுடைந்து போனார். ஆனால் ஒருமுறை அங்கு வந்த ஒரு ண்பரிடன் தன மனைவிக்கு ஒரு கடிதம் எழுதி தன் நிலை குறித்தும் எழுதி அனுப்பியுள்ளார். அந்த ஆள் நல்லவராக இருக்க, அதை அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால் தன் மனைவி எப்படி இருக்கிறார், தனக்கு என்ன குழந்தை பிறந்தது என எதுவுமே இவருக்கு தெரியவில்லை.

வெளி உலகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருந்துள்ளார் நஜீம், அங்கிருந்த ஆடுகள் கூட்டத்தில் ஒரு ஆடு கர்ப்பிணியாக இருந்துள்ளது, ஒரு கட்டத்தில் அதற்கு பிரசவமும் பார்த்துள்ளார். ஒருநாள் அண்ட் அரேபிய ஆள் தன் மகள் திருமணத்திற்காக கிளம்பிய போது, பக்கத்துக்கு கொட்டகையில் இருந்த நபருடன் சேர்ந்து நஜீப் இந்த இடத்தை விட்டு தப்பித்துள்ளார். கிட்டத்தட்ட ஒன்றரை நாட்கள் கடந்த பின் தான் அவர் மெயின் ஏரியாவுக்கே வந்துள்ளார். அங்கு ஒரு நல்ல நபர் இவரை காரில் ஏற்றி, சிட்டிக்கு வந்து விட்டுள்ளார்.

Prithviraj as najeeb

அங்கிருந்த மலையாள நபர் ஒருவர் உதவி நஜீப்புக்கு கிடைத்தது, அந்த நல்ல நண்பர் தான் நஜீமை குளிக்க வைத்து பழைய தோற்றத்துக்கு கொண்டு வந்துள்ளார். அதன் பின் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். நஜீப் பாஸ்போர்ட் இல்லாமல் வந்ததால் அவரை 9 நாட்கள் காவலில் வைத்து இந்திய தூதரகத்துக்கு தெரிவிக்கின்றனர். அதன் பின் இந்திய தூதரகத்தின் உதவியோடு இந்தியா வருகிறார் நஜீப். அவரின் இந்த கதையை தான் ஆடுஜீவிதம் என நாவலாக எழுதியுள்ளார். இந்த நாவலை தான் இயக்குனர் பிளஸ்ஸி ப்ரித்விராஜை வைத்து ஆடு ஜீவிதம் திரைப்படமாக எடுத்துள்ளார்.

நஜீப் பட்ட கஷ்டம் யாரும் பட கூடாது, நஜீப் இடத்தில யாராவது இருந்திருந்தால் இந்நேரம் இருந்திருப்பார்கள், ஆனால் நஜீப் கடவுளை மீது நம்பிக்கை வைத்து தன் உயிரை கையில் பிடித்து தப்பியுள்ளார். நஜீம் அங்கு கொத்தடிமையாக இருந்தது இரண்டு வருடங்கள். இன்று இந்த திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதில் ஐய்யம்மில்லை.

author avatar
Deepika