Connect with us

14 இயக்குனர்கள், 19 ஒளிப்பதிவாளர்கள்.. கின்னஸ் சாதனை வென்ற முதல் தமிழ் திரைப்படம் பற்றி தெரியுமா?

CINEMA

14 இயக்குனர்கள், 19 ஒளிப்பதிவாளர்கள்.. கின்னஸ் சாதனை வென்ற முதல் தமிழ் திரைப்படம் பற்றி தெரியுமா?

கின்னஸ் சாதனை எனபது மிகவும் கவுரவமான அங்கீகாரம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இன்று பல விஷயங்களில் கின்னஸ் சாதனை புரிந்து வருகிறார்கள். அந்த வகையில் பல வருடங்களுக்கு முன்பே கின்னஸ் சாதனை படைத்த தமிழ் படத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா ? அப்படி கின்னஸ் சாதனை படைத்த தமிழ் படத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Suyamvaram

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், சுந்தர் சி, பி வாசு இயக்கத்தில் பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான திரைப்படம் சுயம்வரம். தமிழ் திரையுலகில் முன்னணி கதாபாத்திரங்கள் நிறைய பேர் சேர்ந்த நடித்த திரைப்படம். மிகப்பெரிய தொழில்நுட்பக்குழு, 14 இயக்குனர்கள், 19 சினிமேட்டோகிராஃபர்கள், 30ம் மேற்பட்ட முன்னணி கலைஞர்கள் என பெரிய குழு இந்தப்படத்தில் பணியாற்றியிருந்தனர்.

   

இப்படம் 23 மணி நேரம், 58 நிமிடங்களில், 14 கதாநாயகர்கள், 12 கதாநாயகிகள் நடித்து எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாகும். இதில் 14 இயக்குனர்கள் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. இந்தப்படத்திற்கு தேவா, வித்யாசாகர், ராஜ்குமார், சிற்பி ஆகியோர் இசையமைத்துள்ளனர். சுயம்வரம் படம் 1999இல் ஏப்ரல் ஐந்தாம் தேதி காலை 7 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கி மறுநாள் காலை 6.58 மணி வரை இப்படம் எடுத்து முடிக்கப்பட்டது.

 

Suyamvaram

கதை விஜயகுமார், மஞ்சுளா இவர்களின் 3 மகன்கள் மற்றும் 6 மகள்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்வார்கள், அதற்காக அவர்களின் குடும்ப மருத்துவர், குடும்பத்திற்காக உழைத்த வேலைக்காரர் என அனைவரும் எவ்வாறு உதவுகிறார்கள் என்பதுதான் கதை.

விஜயகுமாருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதையடுத்து பெரும் பணக்காரரான அவர், தனது சொத்துக்களில் சிறு பகுதியைக் கொடுத்து, ஒவ்வொரு பிள்ளைக்கும் திருமணம் முடிக்க முயல்வார். அதற்காக நடக்கும் பெண், மாப்பிள்ளை தேடல் அது தொடர்பாக நடைபெறும் காமெடி, அதிலே குறுக்கிடும் வில்லன் என படம் படு சுவாரஸ்யமாக ஓடும்.

Guniess record suyamvaram movie

படத்தில், மஞ்சுளா மற்றும் விஜயகுமார் தம்பதிகளின் மகன்களாக சத்யராஜ், பிரபு, அப்பாஸ் மற்றும் மகள்களாக ரம்பா, ரோஜா, கஸ்தூரி, மகேஸ்வர், பிரீத்தா விஜயகுமார், சுவலட்சுமி ஆகியோரும், நெப்போலியன் குடும்ப மருத்துவராகவும், பார்த்திபன் குடும்பத்தின் விசுவாசமுள்ள வேலைக்காரராக நடித்து அசத்தியிருப்பார்கள். இவர்கள் தவிர காமெடிக்கு பாக்யராஜ், ஊர்வசி, ஜனகராஜ், செந்தில் ஒருபுறம் அதிர வைத்திருப்பார்கள்.

இப்படி எடுக்கப்பட்ட இந்த சுயம்வரம் படம் கின்னஸ் சாதனை படைத்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.

author avatar
Deepika
Continue Reading
To Top