“என்கிட்டயே விளையாட்டா?”… அமித்ஷா முன் எடப்பாடி கேட்ட ஒற்றைக் கேள்வி….. ஷாக்கில் அதிமுக மேலிடம்… தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பு….!

By Nanthini on ஆவணி 9, 2026

Spread the love

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இரண்டு நாள் பயணமாக சென்னை வந்து சேர்ந்தார். தமிழகத்தில் தவெக அரசு அமைந்த பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் என்பதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும், அரசு சார்பில் அமைச்சர்கள் யாரும் அவரை வரவேற்க வராதது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாகச் சென்னை தெற்கு இணை ஆணையர் விஜயகுமார் மட்டுமே நேரில் வந்து மத்திய அமைச்சரை வரவேற்றார்.

அரசியல் தலைவர்களின் வரவேற்பு வரிசையிலும் வழக்கத்திற்கு மாறாகச் சில மாற்றங்கள் அரங்கேறின. கூட்டணித் தலைமை என்ற முறையில் எடப்பாடி பழனிசாமிக்கே எப்போதும் முதல் மரியாதை அளிக்கப்படும். ஆனால், இம்முறை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முதலில் அமித்ஷாவை வரவேற்றார். அதன்பின்னரே எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த திடீர் மாற்றத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி இதுகுறித்துக் கேட்க, “எனக்கும் ஒன்றும் புரியவில்லை, பிறகு பேசுவோம்” என்று எடப்பாடி அமைதி காத்துள்ளார்.

   

சென்னை வருகையின் போது அமித்ஷாவைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச எடப்பாடி பழனிசாமி விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், “டெல்லியிலிருந்து வரும்போதே பயணத்தில் நேரடியான வாய்ப்பில்லை, டெல்லி திரும்பும் போது நேரம் இருந்தால் தகவல் தெரிவிக்கப்படும்” என பாஜக தரப்பில் முன்பே தெரிவிக்கப்பட்டது. மேலும், டெல்லியிலிருந்து கிளம்பிய விமானம் ஒரு மணி நேரம் தாமதமானதால், சென்னை விமான நிலையத்திலிருந்து உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை செல்ல வேண்டிய அவசரம் அமித்ஷாவிற்கு ஏற்பட்டது.

   

திருவண்ணாமலையில் நிலவிய மேகமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் எழக்கூடும் எனக் கூறப்பட்டதால், அமித்ஷா சென்னையில் யாருக்கும் தனிப்பட்ட சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கவில்லை. இருப்பினும், கட்சி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க அதிமுக தரப்பிலிருந்து அமித்ஷாவை குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்களாவது சந்திக்கத் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுச்சேரி நிகழ்வுகளை முடித்துவிட்டு சென்னை திரும்பும் போது இந்த சந்திப்பு நடக்குமா அல்லது அவர் உடனடியாக டெல்லி புறப்படுவாரா என்பதில் எதிர்பார்ப்பு நீடிக்கிறது.