மகன் மீது இவ்வளவு பாசமா…? விஜயின் ஜாதகத்தை வைத்து பூஜை செய்தாரா S.A.C…? வெளியான வீடியோ…

By Begam on கார்த்திகை 8, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் விஜய். இவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர். 80களில் பெரிய இயக்குனராக இருந்தவர். இவர் பல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். விஜயை அறிமுகம் செய்து சில திரைப்படங்களை இயக்கினார். திரையுலகில் முன்னணி நடிகராக தொழிலில் வளர்ந்து நின்றாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் அப்பா – அம்மாவுடன் சமூகமற்ற நிலையில் விஜயின் உறவு இருப்பது குறிப்பிடத்தக்கது.

   

இவர் தற்பொழுது தந்தை – தாயை பிரிந்து சென்னை நீலாங்கரையில் தனியாக வீடு கட்டி தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார். தற்போது விஜய்க்கும், அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே பெரிதாக பேச்சுவார்த்தை கிடையாது. இந்நிலையில் தளபதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த லியோ திரைப்படம் வசூலில் சக்க போடு போட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

   

 

சமீபத்தில் நடைபெற்ற லியோ வெற்றி விழாவில் கூட விஜயின் தந்தை கலந்துகொள்ளவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இவர்கள் இருவருக்குமிடையில் இருக்கும் மனக்கசப்பை வெளிப்படுத்தும் விதமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

 

இந்நிலையில் நடிகர் விஜயின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீ லிவனேஸ்வரர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்பொழுது குடும்பத்தினரின் ஜாதகங்களை வைத்து அவர் பூஜை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதையும் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..