சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போது வயது மூத்த நடிகருடன் ரகசிய திருமணம்.. தாய் செய்த செயலால் மாறி போன நடிகை கனகாவின் வாழ்க்கை..

By admin on தை 18, 2024

Spread the love

எம்ஜிஆர், சிவாஜி போன்ற தமிழ் சினிமாவின் ஜாம்பவான் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தேவிகா. அவரது மகள் கனகா. கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் ஜோடியாக நடித்தார். தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய ஹிட் படமாக கரகாட்டக்காரன் அமைந்தது. இளையராஜா இசையில் அனைத்து பாடல்களும் டிரண்டிங் ஆயின. கவுண்டமணி செந்தில் வாழைப்பழ காமெடி இன்றும் பிரபலமாக இருக்கிறது. பல தியேட்டர்களில் கரகாட்டக்காரன் படம் ஆண்டுக்கணக்கில் ஓடியது.

   

இதைத்தொடர்ந்து கனகா பல படங்களில் நடித்தார். அதிசயப்பிறவி, கோவில்காளை, கும்பக்கரை தங்கய்யா, தங்கமான ராசா, தாலாட்டு கேக்குதம்மா, பெரிய வீட்டு பண்ணக்காரன், சாமுண்டி என பல படங்களில் நடித்த கனகா, ஒரு கட்டத்தில் காணாமல் போனார். அதன்பிறகு கனகாவை தமிழ் சினிமாவில் காண முடியவில்லை. அம்மா தேவிகா இறந்த பிறகு ஒரு தனி பங்களாவில் அவர் மட்டுமே வாழ்ந்து வருகிறார். விரலுக்கேத்த வீக்கம் படத்தில் கடைசியாக விவேக் ஜோடியாக நடித்திருந்தார் கனகா.

   

 

இந்நிலையில் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு ஒரு நேர்காணலில் கூறியதாவது, ஆந்திராவை சேர்ந்த பிரபல தெலுங்கு நடிகர் என்டி ராமாராவ் ஜோசியம், ஜாதகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர். அவர் அரசியலில் வெற்றி பெற, முதல்வர் பதவிக்கு வர ஆசைப்பட்டதாகவும், அதற்கு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்றும் அதற்காக, நடிகை கனகாவை, சம்பிரதாய சடங்காக அவருக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்பட்டது.

வயதில் பலமடங்கு மூத்தவராக அவருக்கு கனகாவுடன் திருமணம் நடந்ததாகவும், அதுவும் கனகாவின் தாயார் தேவிகா இருந்த காலகட்டத்தில், தேவிகாவே இதற்கான ஏற்பாடுகளை செய்ததாகவும் தகவல் பரவியது. ஆனால் இது உண்மையா, பொய்யா, வதந்தியா என்பது இன்று இதுவரை தெரியவில்லை. இப்படி நடந்தததற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை. இது நடந்ததா, இல்லையா என யாருக்குமே தெரியாது. வதந்தியாக இருக்கும் பட்சத்தில் அதுபற்றி பேசவே கூடாது என்று கூறியிருக்கிறார்.