175 கோடி சம்பளத்திற்காக நடிகர் அஜித் இப்படி ஒரு வேலையை செய்தாரா..? வெளியான செய்தியால் அப்சட் ஆன ரசிகர்கள்..

By Begam

Updated on:

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளர்ந்து வருபவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் தமிழில் முதன் முதலில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பகீரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார்.

   

சமீபத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார். இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இதனை அடுத்து அஜித் நடிப்பில் திரைப்படம் இயக்கப் போவதாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித்தின் இத்திரைப்படம் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்க இருந்த நிலையில் தற்பொழுது கை மாறியுள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்த போதிலிருந்தே அஜித்துடன் நல்ல பழக்கத்துடன் இருந்தவர் ஆதிக் ரவிச்சந்திரன். தற்பொழுது அவருக்கு அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.  விடுதலை, விடுதலை 2 உள்ளிட்ட பல படங்களின் தயாரிப்பாளரான எல்ரெட் குமார் இப்படத்தை தயாரிப்பதாக இருந்தது. இந்நிலையில், எல்ரெட் குமார் கையிலிருந்து இப்படம் தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர் படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் கைக்கு சென்றுவிட்டது.

விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து கொண்டே போவதால், அஜித் படத்தில் கவனம் செலுத்த முடியாத நிலை எல்ரெட் குமாருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ அதிக பட்ஜெட்டுகளில் படமெடுக்கும் பெரிய நிறுவனம் என்பதால் தாராளமான செலவும் செய்வார்கள். ஏற்கெனவே ‘அஜித்துக்கு 165 கோடி பேசப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது 175 கோடி கூட கொடுக்கலாம்’ என  கூறப்படுகிறது.