ஒரு வழியாக துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

By Priya Ram

Published on:

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ரித்து வருமா நடித்துள்ளார். மேலும் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டிலேயே துருவ நட்சத்திரம் படத்திற்கான பணிகள் தொடங்கியது.

   

2018-ஆம் ஆண்டு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில் சில காரணங்களால் படம் தள்ளிப்போனது. முதலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டதால் அவர் தொடர்பான முதல் பாடல் காட்சிகள் நீக்கப்பட்டு புதிய காட்சிகளுடன் பாடல் எடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கௌதம் மேனன் சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்க ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் 2.40 கோடி ரூபாய் வாங்கியதாகவும் அந்த படத்தை முடிக்காததால் பணத்தை திருப்பி தராத பட்சத்தில் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.

இப்படி அடுத்தடுத்த காரணங்களால் படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தை வருகிற ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி கேரளா திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர் இதனால் தமிழ் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

author avatar
Priya Ram