அதிர்ச்சியில் ரசிகர்கள்..! IPL-ல் இருந்து தோனி ஓய்வு..? CSK இயக்குநர் விளக்கம்..!!

Spread the love

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2020-ல் ஓய்வு பெற்ற எம்.எஸ்.தோனி, ஐபிஎல் தொடர்களில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார். அவரது ஓய்வு குறித்த ஊகங்கள் ஒவ்வொரு ஆண்டும் எழுந்து வரும் நிலையில், 2026 ஐபிஎல் சீசனிலும் அவர் விளையாடுவார் என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். 2025 சீசனில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்குப் பிறகு, அடுத்த சீசனில் (IPL 2026) தான் களமிறங்குவது குறித்து தோனி நிர்வாகத்திடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோனியின் ஓய்வு முடிவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த காசி விஸ்வநாதன், ஓய்வு என்பது முற்றிலும் தோனியின் தனிப்பட்ட முடிவு என்றும், அவர் இதுகுறித்து யாரிடமும் முன்கூட்டியே விவாதிக்க மாட்டார் என்றும் தெரிவித்தார். “தனது ஓய்வை எப்போது அறிவிக்க வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்; அவருக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போதுதான் அதைச் செய்வார்” என அவர் விளக்கமளித்தார். மேலும், தோனி ஒரு வீரராக ஓய்வு பெற்றாலும், அவர் எப்போதும் சென்னை அணியுடன் ஏதோ ஒரு வகையில் இணைந்திருப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Soundarya

Recent Posts

அடே… என்னடா இது… விநாயகரை ஏந்திய அஜித் பவார் சிலை… இளைஞரின் செயலால் இணையத்தில் வெடித்த விவாதம்… புனேவில் ஷாக்கிங் சம்பவம்…!

மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த தர்ஷன் சோனாவனே என்ற வாலிபர், விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக மறைந்த முன்னாள் துணை முதல்வர்…

7 minutes ago

டேய்… என்னடா இது… விநாயகர் பக்கத்துல குளிகன் தெய்வமா?… போபாலில் காந்தாரா பாணி… பந்தலைப் பார்த்து மிரண்டுபோன பக்தர்கள்… இணையத்தில் வைரல் வீடியோ…!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திரபுரிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 'இந்திரபுரி கே ராஜா' விநாயகர் பந்தல், 'காந்தாரா' திரைப்படத்தின்…

10 minutes ago

என்னது… விநாயகருக்கு லட்டுக்கு பதிலா டீயா?… தாய்லாந்தில் அரங்கேறும் வினோத வழிபாடு… நெட்டிசன்களை வியக்கவைத்த சம்பவம்…!!

வழக்கமாக விநாயகப் பெருமானுக்கு லட்டு மற்றும் மோதகம் படைக்கப்படும் நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பக்தர்கள் "போபா டீ"…

18 minutes ago

“சாக்கடையில் மிதந்த சடலம்…” பிறந்தநாள் பார்ட்டியில் நுழைந்த போலீஸ்…. வாலிபரை அடித்து கொன்றதாக குற்றச்சாட்டு…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மல்லுபுரா காவல் எல்லைக்குட்பட்ட தனௌலி மயானம் அருகே உள்ள சாக்கடையில், வாலிபர் ஒருவரின் சடலம்…

29 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் ஒரு மனுஷனா… பேல் பூரி வியாபாரியை அடித்து நொறுக்கி… பொரியை ரோட்டில் கொட்டிய கொடூரம்… பீகார் போலீஸ் எடுத்த அதிரடி முடிவு…!!

பீகாரில் வீதியோரம் காரப்பொறி வியாபாரம் செய்து வந்த ஏழை வியாபாரி ஒருவரை, நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும்…

31 minutes ago

“நான் ஆறுதலா இருப்பேன்…” நகை கடை அதிபரின் மகளுடன் நட்பு… மீண்டும் வந்த கணவர் கேட்ட ஒற்றை கேள்வி… போலீஸ் ஸ்டேஷனில் அழுது புலம்பிய பெண்…. பகீர் சம்பவம்…!!

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பாரிமுனையில்…

38 minutes ago