அடுத்தடுத்து ராஜினாமா… இரவில் அரசியல் திருப்பம்…. காலையிலேயே செம ஷாக்கில் தினகரன்…!

By Nanthini on வைகாசி 13, 2026

Spread the love

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனின் சமீபத்திய அரசியல் நகர்வுகள் அக்கட்சிக்குள் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் குரலாக தினகரன் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி மாவட்டச் செயலாளர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, முதுகுளத்தூர் மாவட்டச் செயலாளர் மற்றும் 30-க்கும் மேற்பட்ட ஒன்றியச் செயலாளர்கள் ஒரே இரவில் கட்சியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனும் தனது விலகல் கடிதத்தை அளித்துள்ளது தினகரனுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது. வரும் நாட்களில் மேலும் பல முக்கிய நிர்வாகிகள் வெளியேறத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் கசிந்து வருவதால், செல்வாக்கு சரிவதைக் கண்டு டி.டி.வி. தினகரன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.