தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்தின் 62-வது பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் கஜேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பாப்பாரப்பட்டி நகரச் செயலாளர் ரமேஷின் தாயார் முனியம்மாள் திடீரென அங்கு வந்து, தங்களது பகுதிக்கு முன்னறிவிப்பு இன்றி நிகழ்ச்சி நடத்தப்படுவது குறித்து எம்எல்ஏவிடம் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் அவரை கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி நகரச் செயலாளர் ரமேஷ் மிகுந்த மன உளைச்சலுடன் பேசியுள்ளார். கட்சி வளர்ச்சிக்காகவும், கஜேந்திரன் எம்எல்ஏவாக வெற்றி பெறுவதற்காகவும் தாங்கள் பாப்பாரப்பட்டி பகுதியில் கடுமையாக உழைத்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், தங்களை மதிக்காமல் எந்தவொரு கட்சி நிகழ்ச்சிக்கும் அழைப்பு விடுக்காதது வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ளார். தனது தாயார் நியாயம் கேட்கச் சென்றபோது கட்சி நிர்வாகிகள் அவரை கீழே தள்ளி அவமதித்த விவகாரம், தற்போதைய தவெக நிர்வாகிகளுக்குள் இருக்கும் உட்கட்சி பூசலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் தவெக நிர்வாகிகளிடையே மாவட்டச் செயலாளர் பதவிக்காகப் போட்டி நிலவி வருவதாகவும், இதன் காரணமாக இரு குழுக்களாகப் பிரிந்து அடிக்கடி வாய் தகராறில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கோஷ்டி பூசலின் உச்சகட்டமாக, தற்போது நகரச் செயலாளர் ரமேஷ் தற்கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் வெளியிட்டுள்ள ஆடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அந்த ஆடியோவில், கட்சிக்கு ஒரு நாள் கூட தவறாமல் உழைத்த தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், தான் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு தவெகவின் குறிப்பிட்ட சில முக்கிய நிர்வாகிகள்தான் காரணம் என்றும் அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
ஏற்கனவே தமிழகத்தில் தவெகவின் ஆட்சி நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் குறித்து பல்வேறு அரசியல் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தருமபுரியில் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சி மோதலும், தற்கொலை ஆடியோவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கட்சியின் தலைமை உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தொண்டர்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
உணவுப் பொருட்கள் தயாரிப்பில் கால்களால் மாவை மிதித்துப் பிசையும் அதிர்ச்சிகரமான காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி…
தமிழக வெற்றிக் கழகத்தில் மேலும் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இணையத் தயாராக இருப்பதாக தவெக நிர்வாகி செங்கோட்டையன் பேசிய பேச்சு,…
ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள அஞ்சையா நகரில் அமைந்திருந்த 7 மாடி கட்டிடம் ஒன்றை ஹைட்ரா நிர்வாகம் இடித்துத் தள்ளியுள்ளது. அருகில்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளில் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு…
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், எதிர்பாராத ஒரு நபர் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார். லா ஜொல்லா பகுதியில்…
சென்னைக்கு அருகிலுள்ள பரந்தூர் பகுதியில் 2-வது புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு…