director h vinoth

எச் வினோத் இயக்கும் படத்தை ஓராண்டு தள்ளிப் போட்ட நடிகர் தனுஷ்… டைரக்டர் சொன்ன அதுதான் காரணமா? விரக்தியடைந்த தனுஷ் ரசிகர்கள்!

By Elango on மாசி 17, 2026

Spread the love

தமிழில் நடிகர் தனுஷ் நடித்த இட்லி கடை படம் கடைசியாக வெளியானது. அதன்பிறகு அவர் நடித்த தேரே இஸ்க் மெய்ன் என்ற இந்தி படமும் வெளியானது.அதைத் தொடர்ந்து போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்ற படத்தில் தனுஷ் நடித்து முடித்திருக்கிறார். பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஒரு படத்தில் இப்போது தனுஷ் நடித்து வருகிறார். அடுத்ததாக லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க கமிட் ஆகியுள்ளார். இதுகுறித்து சமீபத்தில் இயக்குனர் எச் வினோத் நடிகர் தனுஷ் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது ராஜ்குமார் பெரியசாமி தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் 2 படங்களை நடித்து முடித்து விட்டு உங்கள் படத்தில் நடிக்கிறேன். ஆனால் ஆகஸ்ட் மாதம் தான் கால்ஷீட் தர முடியும் என்று கூறியிருக்கிறார்.

   

அதற்கு பதிலளித்த இயக்குனர் எச் வினோத், உங்களை வைத்து நான் இயக்கும் படம் கத்தரி வெயில் காலத்தில் எடுக்கப்படும் ஒரு கதைக்களமாக இருக்க வேண்டும். திரையில் எங்கும் பசுமையே தெரிய கூடாது. எல்லாமே வறட்சியாக இருக்க வேண்டும். அதனால் எனக்கு ஆகஸ்ட் மாதம் வேண்டாம் என்பது போல கூறியிருக்கிறார். அப்படி என்றால் 2027ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உங்கள் படத்தில் நடிக்கிறேன். இதில் மாற்றம் எதுவும் இருக்காது என உறுதியாக தனுஷ் கூறிய நிலையில் ஓராண்டுக்கு அந்த படம் தள்ளி போய்விட்டது.