தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் முதன்மையானவராக இருக்கிறார் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் மற்றும் விடுதலை என குறைவான படங்களையே அவர் இயக்கி இருந்தாலும் அந்த படங்களின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.
முன்னணி நடிகர்களை வைத்து கதையில் சமாதானங்கள் இல்லாமல் அவர் எடுக்கும் படங்கள் கமர்ஷியலாகவும் வெற்றி பெறுகின்றன. இதனால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அவர் படத்தில் நடிக்க சென்றால் குறைந்தது இரண்டு வருடமாவது ஆகிவிடும் என்ற இக்கட்டை பொறுத்துக் கொள்ள வேண்டும்.
2007 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்குனராக அறிமுகமான படம் பொல்லாதவன். ஒரு மிடில் கிளாஸ் இளைஞனின் வாழ்க்கையில் ஒரு பைக் வந்து என்னன்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை வித்தியாசமன பின்னணியில் சொல்லியிருப்பார். இந்த படத்துக்கு அவர் முதலில் வைத்த டைட்டில் பொல்லாதவன் இல்லை. இரும்புக்குதிரை என்ற டைட்டிலைதான் வைத்துள்ளார். ஆனால் கமர்ஷியல் வேல்யுவுக்காக இந்த படத்துக்கு ரஜினியின் பழைய படத் தலைப்பான பொல்லாதவன் என்பதை வைத்தார்கள்.
இந்த படத்தில் அதுபோல வணிக மதிப்புக்காக பழைய பாடலான எங்கேயும் எப்போதும் பாடலை ரிமிக்ஸ் செய்தார்கள். அதே போல கல்யாண வீட்டில் குடித்துவிட்டு ஆடுவது போன்ற பாடலாக ‘படிச்சுப் பாத்தேன் ஏறவில்லை… குடிச்சுப் பாத்தேன் ஏறிடுச்சு” என்ற பாடலும் இடம்பெற்றிருக்கும்.
இதில் படிச்சுப் பாத்தேன் பாடலை ஜி வி பிரகாஷ் இசையமைக்கவில்லையாம். அந்த பாடலை இசையமைப்பாளர் தினாதான் உருவாக்கினாராம். அதற்கு ஜி வி சம்மதம் தெரிவித்துவிட்டாராம். அதே போல எங்கேயும் எப்போதும் பாடலை ரீமிக்ஸ் செய்து யோகி பாபுவே பாடினார். ஆனால் இவர்கள் பெயர் படத்தில் இடம்பெறாது. இந்த தகவலை யோகி பி சமீபத்தில் ஒரு பேட்டியில் வெளியிட்டுள்ளார்.