வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மஞ்சு வாரியார் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அசுரன். 2019 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், கென் கருணாஸ், அம்மு அபிராமி மற்றும் ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 2019 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான 67 வது தேசிய விருதுகள் அறிவிப்பில் இப்படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டது.
இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற எள்ளுவய பூக்களையே பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஆகி உள்ள நிலையில் ரசிகர்கள் இன்றும் இந்த பாட்டை கொண்டாடி வருகிறார்கள். இப்படியான நிலையில் பூக்களையே பாடல் உருவான விதம் குறித்து பாடல் ஆசிரியர் யுகபாரதி சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். அதில், இன்று அசுரன் படத்தில் இடம்பெற்ற எள்ளுவய பூக்களையே பாடலை அனைவரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஒரு பாடலின் முதல் வரி எள்ளு என்று எனக்கு தோன்ற முக்கிய காரணம் கஸ்தூரிராஜா சார் எழுதின தூதுவளை இலை அரைச்சு சந்தையில தல நெனச்சி என்ற பாடலும் எருக்கஞ்செடி ஓரம் இறுக்கி புடிச்ச என் மாமா என்ற பாடலும் தான். நூறு ஆண்டு கால சினிமா வரலாற்றில் தூதுவளை என்ற வார்த்தையை பாட்டின் முதல் வாரியாக எழுதிய பெருமை கஸ்தூரிராஜா சாருக்கு தான் சேரும். இப்படி ஒரு வரியை எழுத வேண்டும் என்று வைரமுத்துவுக்கும் தோன்றவில்லை பாரதிராஜாவுக்கும் தோன்றவில்லை. ஆனால் கஸ்தூரிராஜாவுக்கு தோன்றியது. ஏராளமான வெற்றி பாடல்களை எழுதிய அவருடைய அந்த பாடல் மூலமாகத்தான் எள்ளுவய பூக்களையே என்ற பாடலை நான் எழுதினேன் என்று யுக பாரதி பேசியுள்ளார்.
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…
போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணியிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு, உள்ளூர் மீனவ மக்களின்…