கொரோனா காலகட்டத்தில் OTT தலம் மூலம் சூர்யா அவர்களுக்கு சூரரை போற்று வெளிய சூர்யாவுக்கும் இப்படத்தை இயக்கிய சுதா கொங்காரா பிரசாத் அவர்களுக்கும் பெரும் பேரை வாங்கித் தந்தது, அதன் பின் சூர்யா வைத்து வெற்றிமாறன் அவர்கள் இயக்கப் போவதாக அவர்கள் 2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட படம் தான் வாடிவாசல். ஆனால், இதுவரை இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவில்லை. கிலிம்ப்ஸ் வீடியோ மட்டும் இதுவரை வெளிவந்தது.
பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை துவங்காமல் இருப்பதால் ரசிகர்களும் கவலையில் உள்ளனர். சூர்யா – வெற்றிமாறன் கம்போ முதல் முறையாக இப்படத்தில் தான் இணைந்துள்ளது.கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு துவங்கிவிடும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென அதிர்ச்சி தகவல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சூர்யாவிற்கு பதிலாக ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் தயாராக இருக்கிறாராம்.
சூர்யா தன்னுடைய மற்ற படங்களில் பிசியாக இருப்பதனால் இப்படத்தில் நடிக்க முடியாமல் இருந்து வருவதாகவும், இனிமேல் அவரால் நடிக்க முடியாது என்றும் தகவல் கூறப்படுகிறது.ஆனால், இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது இல்லை. திரை வட்டாரத்தில் இப்படியொரு பேச்சு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.