2002 ஆம் ஆண்டு வெளி வந்த துள்ளுவதோ இளமை என்ற படத்தில் தனுசுடன் இணைந்து அறிமுகமானவர் அபிநய். தனுஷின் நண்பராக நடித்தார். அதன் பிறகு ஜங்ஷன், சிங்கார சென்னை, பொன்மலை போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். சக்சஸ், தாஸ், தொடக்கம், சொல்ல சொல்ல இனிக்கும் ,பாலைவனச் சோலை, கார்த்திக் அனிதா, ஆரோகணம், என்றென்றும் புன்னகை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்தார்.
43 வயதான அபிநய் கல்லீரல் தொற்று பிரச்சனை காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வறுமையில் வாடுவதால் நடிகர்கள் பலரும் அவருக்கு உதவி வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் தனுஷ் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். மேலும் நண்பா மீண்டும் வந்து விடுவாய் என்று ஆறுதலும் கூறியிருக்கிறார்.
