திடீர் திருப்பம்…. தனுஷ் அரசியல் என்ட்ரி உறுதி…. இன்று OMR-ல் நடக்கப்போகும் அந்த சம்பவம்…. ஒட்டுமொத்தமாக அலறும் அரசியல் களம்….!

By Nanthini on ஐப்பசி 25, 2026

Spread the love

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் விரைவில் அரசியல் களத்தில் கால்பதிக்கவுள்ளதாக பரவி வரும் தகவல்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன. தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய அவர், மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, இன்று சென்னை ஓ.எம்.ஆர்.-ல் உள்ள தனியார் கல்லூரியில் தனது இயக்கத்தைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை அவர் நேரில் சந்திக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் அவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டு, மதிய விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தனுஷ் சிறப்பு உரையாற்றுவார் என்ற எதிர்பார்ப்பும் அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தனுஷ் ‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கவுள்ளதாகவும், இதற்கான பதிவிற்கான பணிகள் மும்முரமாக நடப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இருப்பினும், தனது அரசியல் பிரவேசம் குறித்து தனுஷ் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டபோது அவர் மறுக்காமல் சிரித்துக்கொண்டே சென்றது, அவர் அரசியலுக்கு வருவது நூறு சதவீதம் நிச்சயம் என்ற நம்பிக்கையை அவரது ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

   

இதற்கிடையில், தனுஷின் அரசியல் நகர்வுகள் குறித்து அரசியல் தரப்பினர் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். தனுஷின் வருகையால் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என சில தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இதனால், நாளைய நிர்வாகிகளின் சந்திப்பு கூட்டத்தில் தனுஷ் இந்த விமர்சனங்களுக்கு மறைமுகமாகவோ அல்லது நேரிடையாகவோ பதிலடி கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.

   

குறிப்பாக, இன்று தனுஷின் சந்திப்பு நடைபெறவிருக்கும் தனியார் கல்லூரி ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவருடன் தொடர்புடையது என்ற தகவலும் கசிந்துள்ளது. இந்தச் சூழலில் நடைபெறும் இந்த மாபெரும் நிர்வாகிகளின் சந்திப்பு கூட்டம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், தனுஷின் அடுத்தகட்ட அரசியல் நகர்வை நிர்ணயிக்கும் முக்கிய மைல்கல்லாகவும் பார்க்கப்படுகிறது.