ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் இன்று ரிலீஸ் ஆனது.வேட்டையன் படத்தில் அமிதாபச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், பகத் பாசில் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வேட்டையன் படத்திலிருந்து மனசிலாயோ பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வேட்டையன் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக மிரட்டுகிறார். இந்த படம் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ரிலீஸ் ஆகிறது.
View this post on Instagram
இந்த நிலையில் மும்பை பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி போடப்பட்டது. நள்ளிரவு முதலே ரசிகர்கள் டிஜே மியூசிக் எல்லாம் வைத்து ரஜினிகாந்தின் படத்தை கொண்டாடியுள்ளனர். இந்த நிலையில் வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க தனுஷ் வேகமாக வந்துள்ளார்.
View this post on Instagram
அது மட்டுமில்லாமல் லதா ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்தின் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோரும் குடும்பத்துடன் வேட்டையன் திரைப்படத்தை பார்க்க வந்தனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. மேலும் வேட்டையின் திரைப்படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் படத்தை பார்க்க வந்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அனிருத் குறி வச்சா இரை விழனும் என பேசியுள்ளார்.
View this post on Instagram
