தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு நடிகர் தனுஷும், நடிகை ஐஸ்வர்யாவும் விவாகரத்தை திரும்பப் பெறப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக லதா ரஜினிகாந்த் இருவரிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

#image_title
இவர்களுடைய விவாகரத்து வழக்கு கடந்த 7 மற்றும் 19ஆம் தேதிகளில் விசாரணைக்கு வந்தபோது இருவரும் ஆஜராகவில்லை. இதற்கிடையில் தான் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, ரஜினி, மனைவி லதாவிடம் மகள் ஐஸ்வர்யாவை நினைத்து மிகவும் கவலைப்பட்டுள்ளார். இதையடுத்து, லதா ஐஸ்வர்யாவிடம், அப்பா சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால், நீ தனுஷூடன் வாழ வேண்டும் என கெஞ்சி கேட்டுள்ளார்.
)
இதையடுத்து, ரஜினி, தீபாவளியன்று தன்னுடைய வீட்டுக்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் அழைத்து பேசியபோது, சௌந்தர்யா திருமணம் செய்து கொண்டு குழந்தைகளோடு சந்தோஷமா வாழ்ந்து வர்றா. ஆனா, நீங்கள் இப்படி இருப்பதை நினைத்து, கஷ்டமா இருக்கு என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

#image_title
அப்பா அழுததும் கண்ணீர் விட்ட ஐஸ்வர்யா அப்பாவை கட்டிப்பிடித்து அழுது சேர்ந்து வாழ்வதாக ஒத்துக்கொண்டுள்ளார். இதனால் விரைவில் இருவரும் சேர்ந்து வாழப்போகிறோம் என்ற அறிக்கை வெளியாகும் என்று பயில்வான் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
