என் தந்தைக்கு அதிமுகவில் மரியாதை இல்லை… அவர் சொல்லி தான் நான் TVK-வுக்கு வந்தேன்… தனபால் மகன் பரபரப்பு பேட்டி..!!

By Soundarya on சித்திரை 9, 2026

Spread the love

ராசிபுரம் தொகுதியில் அதிமுகவின் பலம் முற்றிலும் சரிந்துவிட்டதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரான லோகேஷ் தமிழ்செல்வன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகனான இவர், அதிமுகவில் இருந்தபோது தனக்கும், தன் தந்தைக்கும் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும், குறிப்பாகத் தனது தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது யாரும் கண்டு கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விரக்தியின் காரணமாகவே, தனது தந்தையின் அனுமதி பெற்று, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராசிபுரத்தில் திமுக வேட்பாளருக்கும் தனக்கும் தான் நேரடி போட்டி நிலவுவதாகவும் லோகேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட லோகேஷ், தோல்வியடைந்ததை அடுத்து, தற்போது TVK-வில் இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறார். அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல்களே தன் விலகலுக்கு காரணம் என்பதை உணர்த்தும் வகையில், தான் விஜய் அணியில் இணைந்தது கட்சியின் கொள்கை மற்றும் தலைமை மீது நம்பிக்கை கொண்டுதான் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்