தமிழ் சினிமாவுக்குள் எதிர்பாராத விபத்தாகவே சூர்யாவின் வருகை இருந்தது. கல்லூரிப் படிப்பை முடித்த அவர் கார்மெண்ட்ஸ் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது நேருக்கு நேர் படத்தில் இருந்து அஜித் விலகவே, அவருக்கு பதில் சூர்யா உள்ளே வந்தார்.
சரவணன் என்ற பெயரை மாற்றி சூர்யா என பெயர் வைத்து அவரை நடிகராக்கினார். அதன் பொன்னர் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். முதலில் நடிப்பு, நடனம் எல்லாவற்றிலும் சூர்யா சுமார்தான். ஆனால் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு தன்னை மெருகேற்றிக் கொண்டு இப்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இருக்கிறார். ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித்துக்கு அடுத்த இடத்தில் சூர்யா இருக்கிறார்.
இப்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள கங்குவா திரைப்படம் படு மோசமான எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கங்குவா படத்தில் உள்ளடக்கமாக எதுவுமே இல்லை. வெறுமனே காடுகளில் பிரம்மாண்டமாகக் காட்சிகளை எடுத்துவிட்டால் அது பாகுபலி போல வந்துவிடும் என நினைத்து எடுத்துள்ளார்கள்.

அதனால் படம் பற்றி ஓவர் பில்டப் கொடுக்காமல் இருந்திருந்தாலே இந்தளவுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்திருக்காது. அப்படி படத்தைப் பற்றி படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஒரு நெகட்டிவ் பிம்பத்தை உருவாக்கியவர்கள் அந்த படத்தின் இயக்குனர் சிவாவும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தனஞ்செயனும்தான். படம் ரிலீஸான பின்னர் அவர் மீதான தாக்குதல் அதிகமானது.
இந்நிலையில் இப்போது மௌனம் கலைத்துப் பேசியுள்ள தனஞ்செயன் “ஒரு படம் எடுத்தால் அதன் மேல் நம்பிக்கையாகதான் பேசுவார்கள். பின்ன எப்படி பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். கெஞ்சி பேசவேண்டும் என்றா? அப்போதுதான் இன்னும் வேகமாக அடிப்பார்கள். படத்தைப் பற்றி பாசிட்டிவ்வாக பில்டப் கொடுத்துதான் பேசவேண்டும். ஒரு படம் ஒருவருக்குப் பிடிக்கலாம். மற்றொருவருக்குப் பிடிக்காது. இதல்லாம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட பார்வையைப் பொருத்தது” எனக் கூறியுள்ளார்.
