ஆயிரம் லிட்டர் பாலை ஆத்துல ஊத்துறதா..? கிளம்பிய சர்ச்சை… “இது எங்களோட நம்பிக்கை” விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பக்தர்கள்..!!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் செகோர் மாவட்டத்தில் உள்ள நர்மதா நதியில், சுமார் 11,000 லிட்டர் பால் ஊற்றப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. படாலேஷ்வர் மகாதேவ் கோவிலில் 21 நாட்களாக நடைபெற்ற மகா யாகத்தின் நிறைவு விழாவாக, நர்மதா தேவிக்கு ‘மகா அபிஷேகம்’ செய்யப்பட்டது. இதற்காக பால் டேங்கர் மூலம் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் நதியில் நேரடியாக ஊற்றப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தச் செயலுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நதியில் இவ்வளவு பெரிய அளவில் பாலைக் கொட்டுவது நீரின் ஆக்சிஜன் அளவைக் குறைத்து, மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், நாட்டில் லட்சக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வளவு பாலை வீணாக்குவது நியாயமற்றது என்றும், பசியால் வாடும் குழந்தைகளுக்கு இதை வழங்கியிருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள பக்தர்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள், இது தங்களின் ஆழ்ந்த நம்பிக்கையின் ஒரு பகுதி என்றும், நர்மதா நதியைத் தாயாகக் கருதி இந்த வழிபாட்டை நடத்தியதாகவும் கூறுகின்றனர். நதியில் உள்ள மீன்களும் ஒரு வகை உயிரினங்களே, அவற்றுக்கும் உணவு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ‘மீன்களுக்குப் பால்’ என்ற அடிப்படையில் இந்த நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டதாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மதம் மற்றும் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தர்க்கத்தைப் புகுத்த வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்

Soundarya

Recent Posts

“ஒரு கை ஸ்டீயரிங், மறு கை பட்டாசு”…. உயிரோடு விளையாடும் விபரீத இளைஞர்கள்…. துவாரகா விரைவுச்சாலை ஸ்டண்ட் வைரல் வீடியோ….!

துவாரகா விரைவுச்சாலையில் நள்ளிரவில் இளைஞர்கள் சிலர் காரில் சென்றவாறே 'ஸ்கை ஷாட்' பட்டாசுகளைக் கொளுத்தி ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த…

1 second ago

“பூமி உருண்டைல அப்படி ஒரு இடமே இல்லையாம்”…. ரூ.300 கோடி நூலகத்தில் நடந்தேறிய அதிர்ச்சி மோசடி…. உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா?…. விளாசிய அமைச்சர் ராஜ்மோகன்….!

கோவை காந்திபுரத்தில் கடந்த திமுக ஆட்சியில் சுமார் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்…

5 minutes ago

கட்டுப்பாட்டை இழந்த அசுர வேகம்… நடுரோட்டில் பாய்ந்த தார்… நொடியில் உருக்குலைந்த தீபாவளி அலங்காரம்… சிசிடிவியில் சிக்கிய பகீர் விபத்து…!!

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கலாக்கோடா பாலம் அருகே தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கண்கவர் அலங்கார…

7 minutes ago

ரூ.30 கோடி பேரம்… அதிரடியாகத் தூக்கப்பட்ட அதிமுக பிரமுகர்….. “முஸ்தபா ஒன்றும் அரிச்சந்திரனும் இல்லை”…. எடப்பாடி & செல்லூர் ராஜூவின் அதிரடி தாக்குதல்….!

மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவுக்கு எதிராக எழுந்துள்ள லஞ்சப் பேரம் புகார் மற்றும் அதிமுக நிர்வாகி மன்னனின்…

11 minutes ago

“அமைச்சர் கிளம்பிய சில நிமிடங்களில்… அதிரடியாக இடிந்து விழுந்த ஆட்சியர் அலுவலகச் சிலாப்”…. அமைச்சர் கிளம்பிய சில நிமிடங்களில்… இடிந்து விழுந்த சிலாப்…!

வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ‘ஏ’ பிளாக் ஐந்து தளங்களைக் கொண்ட கட்டடமாகும். இக்கட்டடத்தின் மூன்றாவது மாடியில்…

15 minutes ago

போதையில் அட்டகாசம்… மோதிட்டேன்.. என்னடா பண்ணுவ?… நடுரோட்டில் டிரைவர் மோதல்… அப்பாவி மக்களுடன் கூச்சல் போட்ட பயங்கரம்…!!

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள முக்கிய வீதியொன்றில், மதுபோதையில் தள்ளாடியபடி ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிவந்த நபர் ஒருவர், அவ்வழியே சென்றுகொண்டிருந்த இருசக்கர…

16 minutes ago