திருவண்ணாமலையில் பேரதிர்ச்சி…”அய்யோ காப்பாத்துங்க”…. இடுக்கு பிள்ளையார் கோயிலில் சிக்கி உயிரிழந்த 36 வயது பக்தர்….!

Spread the love

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகத் திகழும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு, கார்த்திகை தீபம் மற்றும் பௌர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். வார விடுமுறை நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசித்து, மலையையே சிவனாகப் பாவித்து 14 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட பாதையில் கிரிவலம் செல்வது வழக்கம். இந்த கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்கள், ஆசிரமங்கள் மற்றும் சிறப்பு வாய்ந்த ஆலயங்களை தரிசித்து வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.

இத்தகைய கிரிவலப் பாதையில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றுதான் இடுக்கு பிள்ளையார் கோயில். ஆந்திர மாநில பக்தர்களால் ‘மோட்ச துவாரா’ என்று அழைக்கப்படும் இக்கோயிலில் உள்ள குறுகிய இடுக்கிற்குள் நுழைந்து வெளியே வந்தால் மோட்சம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. உடல் மெலிதாக இருப்பவர்கள் மட்டுமே சென்று வரக்கூடிய இந்தச் குறுகிய சந்தில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபாடுகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியைச் சேர்ந்த மணிக்குமார் (36) என்ற பக்தர் கிரிவலம் மேற்கொண்டபோது, இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு வந்துள்ளார். அங்கே பக்தர்கள் வரிசையில் காத்திருந்த சூழலில், மணிக்குமார் அந்தச் சிறிய இடுக்கின் வழியாகச் செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடலின் பாதி பகுதி இடுக்கில் நுழைந்த நிலையில், முன்னேறவோ அல்லது பின்வாங்கவோ முடியாமல் சந்தின் நடுவிலேயே பலமாகச் சிக்கிக்கொண்டார்.

நீண்ட நேரம் இடுக்கில் சிக்கியிருந்ததால் அவருக்குக் கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்களும் அங்கிருந்த பக்தர்களும் கூச்சலிட்டு, தீவிர போராட்டத்திற்குப் பிறகு அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் கிரிவலம் வந்த பக்தர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அசம்பாவிதங்களைத் தடுக்க இக்கோயிலுக்குச் சிறப்பு அதிகாரிகளை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Nanthini

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

6 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

6 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

6 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

6 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

6 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

6 மணத்தியாலங்கள் ago