வயசு ஆகிடுச்சேன்னு எப்பவும் கவலைப்படாதீங்க… இண்டர்வெல்லுக்கு அப்புறம்தான் படமே சக்சஸ் ஆகும் – மோடிவேசன் தந்த தேனிசை தென்றல் தேவா!

By Elango on மார்கழி 13, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர் தேனிசை தென்றல் தேவா. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் தேவா கூறியதாவது, பல பேர் நமக்கு 25 வயசு ஆகுதே, இன்னும் சிறந்த வாழ்க்கை அமையலையேன்னு ஏங்கிட்டு இருப்பாங்க. இப்போ 30 வயசு ஆகியும் இன்னும் வாழ்க்கையில் முன்னேறலையேன்னு ரொம்ப கவலைப்படுவாங்க.ஒரு படத்தை வெற்றிப்படம் என்று சொல்கிறோமே, அந்த படமே முதல் பாதி சுமாரா தான் இருக்கும். இடைவேளைக்குப் பிறகுதான் படம் பிக்கப் ஆகும். அப்புறம் கிளைமாக்ஸ் எல்லாம் வேற லெவலா இருக்கும். அதுதான் மிகப்பெரிய வெற்றிப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்படும்.

அப்படித்தான் மனிதர்களோட வாழ்க்கையும். எப்ப வேண்டுமானாலும் மாறிவிடும். நானே 40 வயசுல தான் சினிமாவுக்கு இசையமைக்க வந்தேன். என் படமே இன்டர்வெல்லுக்கு அப்புறம்தான் சக்சஸ் ஆச்சு. அதனால 25 வயசு 30 வயசு ஆகிடுச்சுன்னு சொல்லி வாழ்க்கையை நினைத்து ஏங்காதிங்க, ரொம்பவும் கவலைப்படாதீங்க. வாழ்க்கையில் எந்த வயதில் இருந்தாலும் கண்டிப்பாக ஜெயிக்க முடியும் என்று இசையமைப்பாளர் தேவா பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.