இசையமைப்பாளர் தேவா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றிய பிரபலமான இசையமைப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். 36 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பணியாற்றிய தேவா 400க்கும் மேற்பட்ட திரைபடங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கானா டப்பாங்குத்து பாடல்களை அறிமுகம் செய்தவர் தேவா. 1990களில் இவரது கானா பாடல்கள் மிகப் பிரபலமாக இருந்தது. ஆரம்பத்தில் பொதிகை தொலைக்காட்சியில் சிறிது காலம் பணியாற்றினார் தேவா. வயலும் வாழும் என்ற நிகழ்ச்சிக்கு பாடலுக்கு இசை அமைத்தார். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் வருவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருக்கும் பல வெற்றி பாடல்களை கொடுத்திருக்கிறார் தேவா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாமலை, பாட்ஷா, முத்து ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. இவரது பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாதவை. ஒவ்வொரு பாடலுக்கும் அவ்வளவு மெனக்கெடுவார் தேவா. சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட தேவா ஒரு பாடகரை சந்திக்க ஜெயிலுக்கு சென்றதாக கூறியிருக்கிறார்.

தேவா கூறியது என்னவென்றால் வா முனிமா வா என்ற பாடலுக்காக நான் முதலில் வேறு ஒரு பாடகரை தான் பாட வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அவர் பெயர் பழனிச்சாமி, ஒரு கானா பாட்டுக்காரர். ஆனால் அவர் ஒரு குற்றத்திற்காக ஜெயிலில் இருந்தார். அப்போது நான் அவரை ஜெயிலில் சந்திக்க சென்றேன். அப்போது ஜெயிலர் அவர் கொலை குற்றவாளி தூக்கு தண்டனை கைதி அவர் தப்பி சென்றுவிட்டால் நீங்க தான் மாட்டுவீங்க அதனால் அவரை பாட வைக்கும் போது கையில் விலங்கு போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார். நான் ஒரு கலைஞனை விலங்கு போட்டு பாட வைக்க முடியாது என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். அதற்குப் பிறகுதான் SPB ஐ அந்த பாடலுக்கு பாட வைத்தோம் என்று ஓபனாக கூறியிருக்கிறார் தேவா.
