கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள சாஸ்தான் சுங்கச்சாவடியில் (NH-66), ஓய்வுபெற்ற ராணுவ கமாண்டோ ஷாம்ராஜ் என்பவரை ஊழியர்கள் தடுத்து நிறுத்தி துன்புறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 77-வது குடியரசு தினக் கொண்டாட்டத்திற்கு முன்னதாக நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் போது, உரிய ராணுவ அடையாள ஆவணங்களைச் சமர்ப்பித்த போதிலும், அவருக்கு வழங்கப்பட வேண்டிய கட்டண விலக்கை அளிக்க சுங்கச்சாவடி ஊழியர்கள் மறுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Do we care for Army Soldiers' sacrifices for upholding the liberty and glory of IncredibleBharat??? Commando Shyamraj, 21 SF, hero of operation Parakram is being humiliated. @OfficeOfNG @nitin_gadkari I'm in tears. pic.twitter.com/BeDnOpmUZZ
— Rajiv Azad (@RajivAzad1) January 27, 2026
