அட கொடுமையே… உயிரைப் பறித்த ஆன்லைன் கேம்… மின்விசிறியில் தூக்கில் தொங்கிய போலீஸ்… கதவை உடைத்துப் பார்த்த நண்பர்கள் பேரதிர்ச்சி…!!

By Swetha on ஆவணி 2, 2026

Spread the love

சென்னை கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராகப் பணியாற்றி வந்தவர் விஷ்வநாத் (27). தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கே.கே.நகர் காவல் நிலையக் குடியிருப்பில் தனது நண்பர்களுடன் தங்கிப் பணியாற்றி வந்தார். சமீபகாலமாக இவர் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டுகளில் அதிக அளவு பணத்தை முதலீடு செய்து விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆன்லைன் விளையாட்டில் தொடர்ச்சியாகப் பணத்தை இழந்ததால், விஷ்வநாத் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலிலும் விரக்தியிலும் இருந்த அவர், கடந்த சில நாட்களாகக் யாருடனும் சரியாகப் பேசாமல் தனிமையிலேயே இருந்து வந்துள்ளார்.

   

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு விஷ்வநாத்தைப் பார்ப்பதற்காக அவரது நண்பர்கள் அறைக்குச் சென்றுள்ளனர். அப்போது, அறையின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மின்விசிறியில் விஷ்வநாத் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.