திருச்சி மாவட்டம் துறையூர் கண்ணபிரான் காலனியைச் சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர், தனது பகுதியில் நிலவி வந்த குடிநீர் தட்டுப்பாடு மற்றும் குப்பை தேக்கம் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகள் தொடர்பாக நகராட்சியிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தனது தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான ரவிசங்கரிடம் இது குறித்து நேரடியாகப் புகாரளிக்க மண்ணச்சநல்லூரில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, பொதுமக்களில் ஒருவர் என்று கூட பாராமல் கார்த்திக்குமாரை துணை சபாநாயகர் தகாத வார்த்தைகளால் பேசி, சரமாரியாகத் தாக்கி உதைத்து விரட்டியடித்ததாகக் கூறப்படுகிறது. தான் ஆளுங்கட்சிக்கு வாக்களித்த ஆதரவாளர் என்று அவர் கூறியபோதிலும் நடந்த இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியது. மேலும், காயமடைந்த கார்த்திக்குமார் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.
இச்சம்பவம் இணையத்தில் தீவிர விவாதமான நிலையில், அடுத்த நாளே கார்த்திக்குமார் துணை சபாநாயகருடன் அமர்ந்திருக்கும் சமரச வீடியோ ஒன்று வெளியானது. அதில், கூட்ட நெரிசலில் ஏற்பட்ட சிறு தள்ளுமுள்ளு சம்பவத்தை சமூக வலைதளங்களில் சிலர் தவறாகச் சித்தரித்துவிட்டதாகவும், தாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து செயல்படுவதாகவும் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார்.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…