யாருங்க இங்க சீனியர்..? மாநகராட்சியை அளித்து அட்டூழியம் செய்யும் சேகர்பாபுவா..? பொன்முடியா.?மாநாட்டில் நிர்மல் குமார் பேச்சு..!!

By Soundarya on ஆவணி 21, 2025

Spread the love

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தடபுடலாக நடந்தது. இதுவரை தமிழகத்தில் எந்த ஒரு கட்சி மாநாடும் எந்த அளவுக்கு பிரம்மாண்டமாக நடைபெற்றது இல்லை. தற்போது மாநாடு தொடங்கியுள்ளது. விஜய் நிகழ்ச்சி மேடைக்கு வந்துள்ளார். தவெகவின் கொள்கை தலைவர்களான அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார், காமராஜர் ஆகியோரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மாநாட்டு திடலில் 40 அடி கொடி கம்பத்தில் அக்கட்சியின் கொடியை ஏற்றினார் தலைவர் விஜய். பிறகு மாநாட்டில் பேசிய துணைப்பொதுச்செயலாளர் நிர்மல் குமார், ” தமிழ்நாட்டுக்கு விடுதலை வேண்டும் என்றால், விஜய் முதல்வராக வேண்டும். இங்கே சீனியர்ஸ் இல்லை என்கிறார்கள் சிலர். யாருங்க சீனியர்? ஓசி என்று ஏளனம் செய்த செய்த பொன்முடியா? ரூ.1,000 திட்டத்தை கொச்சையாக பேசிய துரைமுருகனா? சென்னை மாநகராட்சியை அழித்து அட்டூழியம் செய்யும் சேகர் பாபுவா? பத்திரப்பதிவு ஊழல் செய்யும்மூர்த்தியா? இவர்கள் யாருக்குமே துறையையே பற்றி தெரியாது” என்று பேசியுள்ளார்.