dcm

பெண்களுக்கான மகளிர் உரிமை தொகை… துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட புதிய அப்டேட்…

By admin on கார்த்திகை 14, 2024

Spread the love

தமிழக அரசு மக்களின் நலனுக்காக பல நலத்திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறது. அதில் ஒன்றுதான் பெண்கள் உரிமை தொகை. முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றானது இந்த மகளிர் உரிமைத்தொகை. இதன்மூலம் தகுதியுள்ள பெண்களின் குடும்ப அட்டையை வைத்து மாதம் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

   

கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பின்பு ஆரம்பித்த இந்த மகளிர் உதவித்தொகை சேவை இன்று வரை பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அரசாங்கம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இது சார்பாக புதிய அப்டேட்டை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

   

அவர் கூறியது என்னவென்றால் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியபடி பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை கடந்த செப்டம்பர் மாதம் முதல் வழங்கி வருகிறார். இதன் மூலம் ஒரு கோடியே 16 லட்சம் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

 

இன்னும் சில பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்காமல் இருக்கிறது. அதுவும் வருகிற ஜனவரியில் சரி செய்யப்பட்டு விரைவில் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கட்டாயம் வழங்கப்படும் என உறுதி அளித்திருக்கிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.