பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வைத்திருந்தாலும் அவரவர் கட்சிக்குள்ளேயே மோதல் போக்கு என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிமுகவிலிருந்து பிரிந்து செல்லும் நிலையில் இபிஎஸ் எதற்கும் செவி சாய்க்காமல் தன்னந்தனி ஆளாக நின்று அதிமுகவை வழிநடத்தி வருகின்றார். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி, இரண்டு திமுக தொண்டர்கள் சந்தித்தால் கட்சி பணி குறித்து பேசுவார்கள்.
அதே இரண்டு அதிமுக தொண்டர்கள் சந்தித்தால் இருவரும் பேசாமல் எந்த கோஷ்ட்டியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று அவர்களுக்குள் சந்தேகம் இருக்கும். உலகத்திலேயே தங்கள் கட்சி சிக்கல்களுக்காக இன்னொரு கட்சித் தலைவரை பஞ்சாயத்து செய்ய அழைக்கும் அதிமுகவினரை போன்ற நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது” என்று பேசி உள்ளார்.
