நடிகை த்ரிஷாவுக்குத் துணை முதல்வர் பதவி..? முதல்வர் விஜய் போடும் பிளான்… கொளுத்திப்போட்ட ஆர்.பி.உதயகுமார்.. பற்றியெரியும் தமிழக அரசியல்…!!

By Soundarya on ஆனி 27, 2026

Spread the love

தமிழகத்தில் புதிய அரசு அமைந்து பல்வேறு அரசியல் நகர்வுகள் நடந்து வரும் வேளையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசில், பிரபல முன்னணி நடிகை த்ரிஷாவுக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று அவர் லேசாகக் கொளுத்திப் போட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய ஆர்.பி.உதயகுமார், நடிகை த்ரிஷா என்பவர் நட்புக்கும் உறவுக்கும் ஒரு மிகச்சிறந்த இலக்கணமாகத் திகழ்ந்து வருபவர் என்று குறிப்பிட்டுள்ளார். திரையுலகில் பல ஆண்டுகாலமாகத் தொடர்ந்து வரும் இந்த ஆழமான நட்பின் அடிப்படையில், முதலமைச்சர் விஜய் எப்போது வேண்டுமானாலும் த்ரிஷாவைத் தமிழ்நாட்டின் அடுத்த துணை முதல்வராக அறிவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அவர் தனது அரசியல் கணிப்பை முன்வைத்துள்ளார்.

   

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து குறுகிய காலத்திலேயே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள முதலமைச்சர் விஜய், தற்பொழுது வரை தனது அமைச்சரவையிலோ அல்லது கட்சியிலோ அடுத்தகட்டப் பொறுப்புகள் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்காத நிலையில், அதிமுக மூத்த தலைவரின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது. தவெக மற்றும் அதிமுக ஆகிய இருதரப்புத் தொண்டர்களிடையேயும் இந்த விவகாரம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதப் பொருளாக மாறியுள்ளது.